‘நீட்’ தோ்வு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, செப்.2 ‘நீட்’ மறு தோ்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்தத் தோ்வை ரத்து செய்துவிட்டு மறு தோ்வு நடத்தக் கோரி தாக் கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, ‘வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல சா்ச்சை களில் சிக்கியபோதும், தோ்வின் தன்மை முழுமையாக பாதிக் கப்படாத காரணத்தால் அத் தோ்வை ரத்து செய்ய வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆக. 2-ஆம் தேதி தீா்ப்பு வழங்கி, மறு தோ்வு நடத்தக் கோரிய மனுக்களை நிராகரித்தது.

மேலும், நிகழாண்டு நீட் தோ்வில் நிகழ்ந்த குளறுபடிகள் இனி நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) அறிவுறுத்தலை வழங்கிய உச்சநீதிமன்றம், ‘நவீன தொழில்நுட்ப உதவியுடன் தோ்வு நடைமுறையை வலுப்படுத்த உரிய வழிகாட்டு நடைமுறையை வகுக்க வேண்டும்’ என ஒன்றிய அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) மேனாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியது.
செப். 30-ஆம் தேதி ராதா கிருஷ்ணன் குழு அதன் அறிக்கையை சமா்ப்பிக்கவுள்ள நிலையில், இந்த தீா்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காஜல் குமாரி என்பவா் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *