ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியை ஒதுக்காவிட்டால் ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம்

viduthalai
3 Min Read

சென்னை, ஆக.31- ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி நிதியை ஒதுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஒருங்கிணைந்த

பள்ளிக் கல்வி நிதி

ஒன்றிய அரசின் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட் டத்தின் (சமக்ர சிக்ஷா அபி யான்) கீழ் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு ஊதியம், ஆசிரியர்களுக் கான சிறப்பு பயிற்சி. கலைத் திரு விழா உள்ளிட்ட பல்வேறு கல்வி நலனை உள்ளடக்கிய செயல் பாடுகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்துக்காக ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு தொகை செலவிடப்படும் என மதிப்பிடப் பட்டு, அதில் 40 சதவீதம் மாநில அரசும், மீதமுள்ள 60 சதவீதத்தை ஒன்றிய அரசும் நிதியாக ஒதுக்கு கிறது. இதில் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகை தவணைகளாக வழங்கப்படும். அந்தவகையில் தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் ரூ.3 ஆயிரத்து 586 கோடி நிதியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு செலவிட மதிப்பிடப்பட்டது. அதில் ஒன்றிய அரசு தன் பங்காக ரூ. 2 ஆயிரத்து 152 கோடி தர வேண்டும்.

ஒன்றிய அமைச்சகத்திடம் கோரிக்கை
இதில் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட வேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடி இதுவரை வழங்கப்படாமல் இருக்கிறது. ஒன்றிய அரசின் நிதி வராவிட்டாலும், மாநில அரசின் பங்களிப்பு நிதியை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டப் பணிகள் முழுமையாக மேற்கொள்ள முடியாமல் பள்ளிக்கல்வித்துறை திண்டாடி வருகிறது. மேலும், அந்த பணிகளில் தொய்வும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதியை விரைந்து ஒதுக்க டில்லி சென்று ஒன்றிய அமைச்சகத்திடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.

அதில், நடப்பாண்டுக்கு வழங்க வேண்டிய முதல் தவணை யான ரூ.573 கோடியும் கடந்த நிதியாண்டில் வழங்கப்படாமல் உள்ள ரூ.249 கோடி என ரூ.822 கோடியை விரைந்து ஒதுக்கக் கோரியும், நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதால் ஒருங்கி ணைந்த பள்ளித் திட்டப் பணிகளில் ஏற்பட்டிருக்கும் தொய்வு பற்றியும் விளக்கமாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

‘கறார்” காட்டும் ஒன்றிய அரசு

கோரிக்கை மனு அளித்தது தொடர்பாக உயர் அதிகாரியிடம் கேட்டபோது கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நிதி ஒதுக்காமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் எந்த திட்டத்தையும் செயலாற்ற முடியாது’ என்றார்.

ஒன்றிய அரசின் ‘பிஎம் சிறீ பள்ளித் திட்டத்தை அமல் படுத்தினால் நிதிஒதுக்குவோம் என ஒன்றிய அரசு ஒரு பக்கம் கறார் காட்டுகிறது. அதில் தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மும் மொழிக்கொள்கை இடம் பெற்றிருப்பதாக கூறி அதை நிறைவேற்ற முடியாது என மாநில அரசு கூறுகிறது.

நிதி ஒதுக்காவிட்டால் போராட்டம்

இதனிடையே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப் பதற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன. ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் கூறும்போது, ‘தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், ‘ஒன்றிய அரசு தன்னுடைய பாரபட்சமான போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் நலன் கருதியும், கல்வி எதிர்கா லத்தை கருதியும் ஒன்றிய அரசை கண்டித்து மாநில அளவில் போராட்டங்களை முன்னெடுப்போம்’ என்றார்.

இதேபோல், மேலும் சில ஆசிரியர் சங்கங்களும் போராட் டம் நடத்தப்போவதாக அறிவித் திருக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *