31.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை உயர் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. கேரளா அரசு தொடர்ந்த வழக்கில் திருப்பம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி சிலை சேதமடைந்து கீழே விழுந்ததற்கு, மன்னிப்பு கோரினார் மோடி.
* அரசியல் தளத்தில் ராகுலின் செல்வாக்கு உயர்ந்து வருவதை பாஜக தலைவர்கள் உணர்ந்துள்ளனர் என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனது சொந்த அறக்கட்டளைக்கு ஒதுக்கியது மகாராட்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் உள்ள சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரத்தோட் என்பது அம்பலமானது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த செல்வதாக சொல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பக்கம் செல்லாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி.
தி இந்து:
* அயோத்தி மீதான பாஜகவின் பற்று உணர்வுபூர்வ மானது அல்ல, மாறாக நிலம் மற்றும் லாபம் தொடர் பாக ரியல் எஸ்டேட் பேராசை என அகிலேஷ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* 2024-2025 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 15 மாதங்களில் இல்லாத அளவு 6.7 சதவீதமாக குறைந்துள்ளது,
– குடந்தை கருணா