தமிழ்நாடு அரசால் பாரம்பரிய விதை நெல் பாதுகாவலர் விருது பெற்ற திராவிடர் கழக கண்ணந்தங்குடி கீழையூர் கிளைகழக செயலாளர் ப. தாமரைக்கண்ணன் அவர்களுக்கு 30-08-2024 அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விருது பெற்ற தாமரைக்கண்ணனுக்கு திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தும் புத்தகங்களை பரிசாக வழங்கியும் பாராட்டு தெரிவித்தனர்.
பாரம்பரிய விதைநெல் பாதுகாவலர் விருது பெற்ற கண்ணை ப.தாமரைக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு
Leave a Comment