20 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும்
சென்னை, ஆக.31- விவ சாயத்தை மேம்படுத்தும் வகை யில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கிராமம் ஒரு பயிர் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 15 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமம்,ஒரு பயிர் நாட் டின் உண்மையான முன்னேற்றம் கிராமங்களின் வளர்ச்சியில் உள்ளது என்ற காந்திய சிந் தனையில் கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், நசிந்து வரும் விவசாயத்தை மேம்படுத்தவும் தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 280 வருவாய் கிரா மங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ என்ற புதிய திட்டம் செயல் பாட்டுக்கு வந்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எந்த பயிர் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறதோ,எந்த மண் வளத்திற்கு எந்த பயிர் அதிகமாக விளைகிறதோ அந்த பயிரை தேர்ந்தெடுத்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இல்லாமல், பருவ நிலைக்கேற்ப பயிரிடும் காலத்தை வைத்து இந்த திட்டம் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தேர்வு எப்படி?
அதாவது, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் எந்த பயிர் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதுவே வருவாய் கிராமத்துக்கான பயிராக தேர்வு செய்யப்படுகிறது. அனைத்து உதவி வேளாண்மை அலுவலர்களுக்கும், ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தில் வருவாய் கிராமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கிராமத்திலும் 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய் யப்படும் பயிரின் செயல் விளக்க திடல் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த செயல் விளக்க திடலில், விவசாயிகளுக்கு தேவையான பயிர் சாகுபடி, தொழில் நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சல் ரகங்கள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த பயிற்சி போன்ற அனைத்து இனங்களிலும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
20 சதவீதம் வரை கூடுதல் மகசூல்
இந்த திட்டத்தினால் 15 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறுவது உறுதி செய்யப்படும். விவசாயிக ளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்த திட்டத்தில் பெற்று தரப்படும். இதற்காக ஒவ்வொரு வட் டாரத்திலும் 2கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு ஏக்கர் பரப்புள்ள நிரந்தர வயல் அமைக்கப்பட்டு, பூச்சிகள் மற்றும் நோய்கள் கண்காணிக்கப்படும்.
இந்த சாகுபடி நுட்பங்களை மற்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு அவர்களும் இத் தொழில் நுட்பத்தை பின்பற்ற வேண்டும். இந்த திட்டத்தில் நெல்,சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு,துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை,எள், சூரியகாந்தி, பருத்தி,கரும்பு போன்ற முக்கியப் பயிர்கள் இடம்பெற்றுள்ளன.
3 ஆயிரம் கிராமங்களில் விழிப்புணர்வு
அந்தவகையில் ‘ஒரு கிரா மம் ஒரு பயிர்’ என்ற இந்த புதிய திட்டத்தை வேளாண்மைத்துறை முழு வீச்சில் கொண்டு செயல் படுத்த திட்டமிட்டுள்ளது. மாவட்டம் வாரியாக இதற்காக பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு விவசாயிகளுடன் ஆலோசனை – விழிப்புணர்வு பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.பல மாவட்டங் களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் கிராமங்களில் தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வேளாண்துறை வெற்றிகரமாக நடத்தி முடித் துள்ளது.