புதுடில்லி, ஆக.31- பா.ஜ.,வுக்கும், காங்கிரசிற்கும் இடையில் கடும் இழுபறி நீடிப்பதால், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நாடாளுமன்ற நிலைக் குழுக்களை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து நிதி நிலை கூட்டத் தொடரும் நிறைவு பெற்று விட்டது. இந்நிலையில், பல்வேறு சட்ட மசோதாக்களை ஆய்வு செய்ய வேண்டியதற்காக நிலை குழுக்கள் உட்பட பல்வேறு அலுவல் ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டாக வேண்டும்.
இந்த குழுக்களின் உறுப்பினர்களாக ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களில் மிகவும் முக்கியமானவை, நாடாளுமன்ற நிலைக் குழுக்கள்.
இதன்படி, முக்கியமான அமைச் சகங்கள் ஒவ்வொன்றிற்கும் நிலைக்குழு அமைக்கப்படுவது உண்டு. நாடாளு மன்றத்தில் தாக்கலாகி விவாதத்துக்கு உள்ளாகும் முக்கிய மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்போ அல்லது ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால், அந்த மசோ தாக்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இத்தகைய பலம் வாய்ந்த நிலைக் குழுக்களை கைப்பற்றுவதற்கும், அதன் தலைவராவதற்கும் முக்கிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்படும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்திற்கு ஏற்பவே நிலைக் குழுக்கள் பகிர்ந்தளிக்கப்படுவது வழக்கம்.
மக்களவை நிலைக் குழுக்கள், மாநிலங்களவை நிலைக் குழுக்கள் என இரு வேறு பிரிவுகள் உள்ளன. அதில், மக்களவை சார்பில் 16 நிலைக் குழுக்களும், மாநிலங்களவையின் சார்பில் 8 நிலைக் குழுக்களும் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்த குழுக்களை பகிர்ந்து கொள்வதில்தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த 24 நிலைக் குழுக்களில் 4 மக்களவை நிலைக் குழுக்களையும், ஒரு மாநிலங்களவை நிலைக் குழுவையும் தங்களுக்கு தர வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளும் தரப்பான பா.ஜ.,வோ, மொத்தமே 3 நிலைக் குழுக்கள் மட்டும் காங்கிரசுக்கு வழங்க முடியும் என தெரிவித்துவிட்டது. இது தவிர, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு நிலைக் குழு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையில் ஏற்பட்டு உள்ள இந்த மோதலால், நிலைக் குழுக்கள் அமைக்கும் நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேஹ்வால், காங்கிரஸ் மக்களவைத் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்கள் கொடிக்குன்னில் சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதில், காங்கிரஸ் தரப்பில் தங்களுக்கு 5 நிலை குழுக்கள் தந்தாக வேண்டும் என்று, தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிலைக் குழுவை தங்களுக்கு அளித்தாக வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், நாடாளுமன்றக் குழுக் களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவான பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பதவி, காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளதை அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. ஆனாலும், காங்கிரஸ் இதை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.
நிலைக் குழுக்கள் அமைக்கப்படும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள் ளதை அடுத்து, பிற முக்கிய கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவிக்கத் துவங்கி யுள்ளன.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் டெரிக் ஒ பிரையன் சார்பில் மாநிலங்களவை செயலகத்திற்கு எழுதிய கடிதத்தில், நிலைக்குழு அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தவிர, பிற முக்கிய கட்சிகளின் சார்பிலும் அதிருப்திக் குரல்கள் கிளம்பியுள்ளன. இதனால், நிலைக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் குறித்து பெரிய அளவில் அர சியல் ரீதியான பிரச்சினைகள் விரைவில் வெடிக்கலாம் என கூறப்படுகிறது.