புதுடில்லி, ஆக 8 மணிப்பூர் இனக்கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க 3 மேனாள் பெண்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மணிப்பூர் மாநிலம் கடந்த மே 3ஆம் தேதி முதல் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2 பழங் குடியின பெண்கள் நிர்வாணப் படுத்தப்பட்டு ஒரு கும்பலால் ஆடையின்றி அழைத்துச் செல் லப்பட்ட சம்பவம் நாடு முழு வதும் அதிர்வலைகளை ஏற்படுத் தியது. இந்த வழக்கை உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ்மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த ஆக.1ஆம் தேதி விசாரித்த போது, மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக உச்ச நீதி மன்றம் கூறியது. இந்த நிலையில் நேற்று (7.8.2023) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மணிப்பூர் கலவரத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் (ஓய்வு) ஷாலினி பி ஜோஷி மற்றும் ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. மணிப் பூர் மாநிலத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கையை மீட்டெடுப்பதே உச்ச நீதிமன்றத்தின் முயற்சி என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
மேலும் நீதித்துறை குழுவைத் தவிர, மணிப்பூர் சிறப்பு விசா ரணை குழுக்களால் விசாரிக்கப் படும் குற்ற வழக்குகளின் விசா ரணையை மேற்பார்வையிட மூத்த காவல்துறை அதிகாரிகளை அமைக்க வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் விரிவான உத்தரவு பதிவேற்றப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணைக் குழு தலைவராக மேனாள் மகராட்டிய டிஜிபி
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது,’ மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான 11 எப்அய்ஆர்கள் சிபிஅய்க்கு மாற்றப்படும். மற்ற வழக்குகளை நாங்கள் சிபிஅய்க்கு மாற்றப் போவதில்லை. ஏனென் றால் உங்களிடம் (மாநில அரசு) விசாரணை நிறுவனம் இருப்ப தால் அது விசாரணையைக் கவனிக்கும். ஆனால் நம்பிக்கை உணர்வு இருப்பதை உறுதி செய்வதற்காக, துணைக்கண் காணிப்பாளர் பதவிக்கும் குறையாத 5 அதிகாரிகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து சிபிஅய்க்குக் கொண்டு வந்து விசாரணையை மேற்பார்வையிட வேண்டும். இந்த அதிகாரிகள் சிபிஅய்யின் நிர்வாக அமைப் பிற்குள் செயல்படுவார்கள். சிபிஅய் இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியால் வழக்குகளை கண்காணிக் கப்படலாம். மேலும் நாங்கள் எங்களுக்காக இன்னும் ஒரு அடுக்கு ஆய்வு குழுக்களை சேர்க்கப் போகிறோம். நாங்கள் ஏற்கனவே அந்த அதிகாரியை அடையாளம் கண்டுவிட்டோம். மேனாள் மகாராட்டிர காவல் துறை இயக்குநர் தத்தாத்ரே பட்சல்கிகர் ஒட்டுமொத்த விசாரணையைக் கண்காணித்து முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பார் என்று தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், ‘‘சிபி அய்க்கு மாற்றப்படாத வழக்கு களை சுமார் 42 மாநில சிறப்பு புலனாய்வுக்குழுக்கள் விசாரிக் கும். இந்த சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு காவல் ஆய்வாளரையாவது மணிப்பூர் காவல்துறை பிரதிநிதித்துவத்தில் கொண்டு வர வேண்டும். இந்த 42 சிறப்பு புலனாய்வுக்குழுக்கள் மணிப்பூர் மாநிலத்திற்கு வெளி யில் இருந்து வரும் 6 டிஅய்ஜி தகுதி கொண்ட அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
ரைபிள்ஸ் படைக்கு எதிராக பெண்கள் போராட்டம்
மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கில் அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு எதிராக மீரா பைபி என்ற மெய்தி பெண்களின் கூட்டுப் போராட் டம் நடைபெற்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அசாம் ரைபிள் படை களை அகற்றக் கோரியும், அவர் களது அத்துமீறல்கள் குறித்தும் அவர்கள் போராட்டம் நடத் தினார்கள். அப்போது சாலை களை மறித்து, பல்வேறு பகுதி களில் உள்ளிருப்புப் போராட் டங்களை நடத்தினர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஹோடம் லீராக் பகுதியி பெண்கள் தெருக்களில் இறங்கி, பிஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையை மறித்தனர். இம்பால் மேற்கு மாவட்டம், இம்பால் கிழக்கு மாவட்டம், தவுபால், பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சோனியாவுடன் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே, நாடாளு மன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் மணிப்பூரைச் சேர்ந்த கட்சித் தலைவர்களை சந்தித்தனர். அப்போது கலவரத் தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மணிப்பூர் குழுவில் முன்னாள் முதல்வர் இபோபி சிங், மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கே.மேகச் சந்திர சிங், சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவர் கே.ரஞ்சித் சிங், மணிப்பூர் காங் கிரஸ் பொருளாளர் லோகேஷ் வர் சிங்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .கூட்டத்தில் காங் கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.