அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, ஆக.30- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று (29.08.2024) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங் கினார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா, மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் வி.கலையரசி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.