பகுத்தறிவாளர் கழக விழாவில் என்எல்சி செயல் இயக்குநர் பெருமிதம்
நெய்வேலி, ஆக.29- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 25.9.2024 அன்று நெய்வேலி தொ.மு.ச. கலைஞர் அரங்கில் நடந்தது. இதன் துவக்க விழாவிற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வி.அருணாச்சலம் தலைமை தாங்கி, வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் வி வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில் பெரியார் ஒரு கேள்விக்குறி, என்றும் தேவை பெரியார், புரட்சியாளர் பெரியார் என்னும் ஒன்பது தலைப்புகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக கட லூர் தமிழ் சங்கத் தலைவர் பேராசிரியர் குழந்தைவேலனார் கலந்துகொண்டு பெரியாரின் சிறப்பு குறித்து பேசினார். இதில் நடுவர்களாக பேராசிரியர் குழந்தைவேலனார், செயல் இயக்குநர் அன்புச்செல்வன் கவிஞர் எழிலேந்தி ஆகியோர் வெற்றியாளர்களை தேர்ந்தெ டுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவரது சகிப்புத்தன்மையே காரணமாகும்!
முதன்மை சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்ட என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் திட்டத்தின் செயல் இயக்குநர் அன்புச்செல்வன் பேசியதாவது: தந்தை பெரியார் நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய ‘பொக்கி ஷம்’ ஆகும். அவர் தனது கொள்கையிலே ஆணித்தரமாக கூறியதாலே அனைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்து தந்தை பெரியார் என போற்றப்பட்டார். அவரது இத்தகை உயர்வுக்கு அவரது சகிப்புத்தன்மையே காரணமாகும். இன்று நாம் உலகம் எங்கும் போற்றப்படும் பெரியார் துவக்கக் காலத்தில் குக்கிராமங்களில் தான் தனது பணியை துவக்கினார். சமூகத்தில் பரவி கிடந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தும், பெண் விடு தலைக்காகவும் போராடி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டார். அதனால்தான் அவர் அறிவு ஆசான், தத்துவ மேதை என்றெல்லாம் போற்றப்படு கிறார்.
இன்றைய சூழலில் இளம் இளைய தலைமுறை புரட்சியாளர் பெரியாரின் கருத்துகளை உள்வாங்கி அனைத்து தரப்பு மக்களிடத்திலும் கொண்டு செல்வதற்கு இதுபோன்ற பேச்சு பயிற்சிகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
இதில் மாவட்டத் தலைவர் தண்டபாணி, கிளை நிர்வாகி கள் கண்ணன், பாஸ்கர் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பா ளர் பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமநாதன், நகர செயலாளர் ரத்னசபாபதி, நகரத் தலைவர் இசக்கிமுத்து, இளைஞரணி செயலாளர்கள் நடராஜமணி, மாணிக்கவேல், பொதுக்குழு உறுப்பினர் வேகாக்கொல்லை நா.தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட அமைப்பாளர் மணி வேல் நன்றி கூறினார்.
போட்டிகளில் முதல் பரிசு ரூ.2000 ரொக்கத்தினை கடலூர் கிருஷ்ணசாமி அறிவியல் கல்லூரி மாணவி ப்ரீத்தி, இரண்டாம் பரிசு ரூபாய் 1,500 ரூபாய், பண்ருட்டி ஜான்டூயி கல்லூரி மாணவி பர்வீன் பானு, மூன்றாம் பரிசினை கடலூர் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர் வெஸ்டர்ன் இஸ்ரேல் ஆகியோரும் பெற்றனர். இது தவிர ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது போட்டிகளில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.