29.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* 12 தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களை 10 மாநிலங்களில் அமைக்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒன்று கூட இல்லை. முற்றிலும் புறக்கணிப்பு.
தி டெலிகிராப்
* உ.பி. அரசின் புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை. அரசுக்கு ஜால்ரா போட்டால் மாதம் ரூ.8 லட்சம் வரை கிடைக்குமாம். எதிரான செய்திக்கு சட்ட நடவடிக்கை. பேச்சு சுதந்திரத்தை முடக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* எந்தெந்த இந்திய மாநிலங்கள் மதுபானத்திற்காக அதிகம் செலவிடுகின்றன? ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா முன்னணியில் உள்ளது. என்எஸ்எஸ்ஓவின் கணக்கெடுப்பு தரவுகளின்படி, அதிக செலவினங்களைக் கொண்ட பிற முக்கிய மாநிலங்களில் கேரளா ரூ.486, இமாச்சலப் பிரதேசம் ரூ.457, பஞ்சாப் ரூ.453, தமிழ்நாடு ரூ.330 மற்றும் ராஜஸ்தான் ரூ.308.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment