ஒன்றிய அரசைக் கண்டித்து செப்.3-இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்
புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP 2020) ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும், செப்.3-இல், கழக மாவட்டங்களில் திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்கள், ஒத்த கருத்துள்ள அமைப்பினர் இதில் கலந்து கொள்வர்.
இது குறித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை நாளைய (29.8.2024) ‘விடுதலை’யில் வெளிவரும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்