பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
கிருட்டினகிரியில்….. கழகத் துணைத் தலைவர் கவிஞர் சிறப்புரை
கிருட்டினகிரி, ஆக.28- கும்பகோனம் கழகப் பொதுக் குழு வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படைடையில் தலைமை கழகம் அறிவிப்பின்படி கிருட் டினகிரி மாவட்ட கழக சார்பில் கிருட்டிணகிரி 5 ரோடு காந்தி சாலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண் ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51-A (h) பிரிவு விளக்கப் பரப்புரை திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் 25/08/2024 அன்று மாலை 5.30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடன் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தி.கதிரவன், சி.சீனிவாசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயணமூர்த்தி, மாவட்ட விவசாயணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க. செயலாளர் க.வெங்கடேசன், மாவட்டப.க. துணைச் செயலாளர் மா.சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருட்டினகிரி ஒன்றி யத் தலைவர் த.மாது அனைவ ரையும் வரவேற்றார். மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா. சரவணன் தொடக்கவுரை யாற்றினார்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் நகரமன்றத் தலைவருமான பி.பரிதா நவாப், திமுக மாவட்ட துணைச் செயலாளரும் நகர மன்றத் துணைத்தலைவமான சாவித்திரி கடலரசு மூர்த்தி, காங்கிரஸ் கட்சி மேனாள் மாவட்டத் தலைவர் ஜேசு துரைராஜ், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் மு.சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் நூர்முகமது, கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கழகத் துணைத்தலைவர் சிறப்புரை
நிறைவாக திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுயமரியாதை இயக்கம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளை விளக்கியும், மூடநம்பிக்கை ஒழிப்புக்காக திராவிடர் கழகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை எடுத்துக் கூறியும், இந்திய அரசியல் சட்டம் 51-A (h) பிரிவு விளக்கத்தை எடுத்துக் கூறியும், காவல்துறை இந்த பொதுக்கூட்டத்திற்கு சில விதிமுறைகள் விதித்து கடிதம் ஒன்று நடப்பது திராவிட மாடல் ஆட்சி அனைத்தும் அனைவருக் குமான ஆட்சி தான் திமுக ஆட்சி.
நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம். திராவிடர் கழகத்திற்கு கொள்கை வகுத்தளிக்கம் உரிமை காவல்துறை இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த செப் 17ஆம் நாளை சமூகநீதி நாளாக அறிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசின் கடைநிலை ஊழியர் முதல் தலைமைச் செயலாளர் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17-அன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனை கிருட்டினகிரி காவல் துறையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து தெளிவுப்படுத்தியும். இதனை பின்பற்றுகின்றனரா காவல்துறையினர்? என்பதையும் தோழர்கள் கண்காணியுங்கள் என்றும் சமூகநீதி நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று எடுத்து கூறி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிசெல்வி பூங்குன்றன், அலகுமணி வெங் கடாசலம்,மதிமுக தீர்மானக்குழு உறுப்பினர் வி.கே.இளங்கோ, தி.மு.க. கடலரசு மூர்த்தி, நகமன்ற உறுப்பினர்கள்,சேலம் மாவட்ட ப.க.தலைவர் வீரமணி ராஜீ, கிருட்டினகிரி மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன், தொழிலாளரணி செ.ப.மூர்த்தி, தருமபுரி மாவட்ட தொழிலாளரணி மு.சிசுபாலன், திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ், சென்னை அறிவு வழி காணொலி தாமோதரன், சென்னகிருட்டினன், காவேரிப் பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், செயலாளர் பெ.செல்வேந்திரன், முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் இராசா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பூ. இராசேந்திரபாப, கிருட்டினகிரி ஒன்றிய செயலாளர் கி.வேலன், நகர தலைவர் கோ. தங்கராசன், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், திமுக நகர அவைத்தலைவர் மாதன், மா.சீவரத்தினம், மா. வேணுகோபால், மு.திலக், மகளிரணி சிவசக்தி, அஞ்சலி, பெரியார் பிஞ்சுகள் தி.அ.அனலரசு தி.அ.அறிவுக்கனல், செ.வீரபாண்டி, எல்லாம்மாள், ராகுல் உள்பட திராவிடர் கழகம், திமுக மகளிரணி, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் பெரும் திரளாக கலந்து கொண் டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தருமபுரி மண்டல மேனாள் தலைவர் பழ.வெங்கடாசலம் சாமியார்கள் மந்திரவாதிகள் மோடிகளை எடுத்துக் கூறி மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விளக்க கலைநிகழ்ச்சி செய்து காண்பித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக கிருட்டினகிரி நகர செயலாளர் ஆட்டோ அ.கோ.இராசா நன்றி கூறினார்.
கிருட்டினகிரி நகர மன்றத்தின் சார்பில் நகர மன்றத் தலைவர் பரிதா, துணைத்தலைவர் சாவித்திரி ஆகியோர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு சால்வை அணிவித்தனர்.
கழகத் துணைத்தலைவர் நகரமன்ற தலைவருக்கு சால்வை அணிவித்தார். கூட்டம் சிறப்பாக நடைபெற களப்பணியாற்றிய கழகத் தோழர்கள் இல. ஆறுமுகம், பெ.செல்வம், பூ. இராசேந்திரபாபு, அ.கோ.இராசா, சீ.சீனிவாசன், த.மாது, கி. வேலன் சி. இராசா ஆகியோருக்கு மாவட்ட கழகம் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை செயராமன் சால்வை அணித்து சிறப்பித்தார்.
திருமருகல் – திருச்செங்கட்டாங்குடியில்…
திருச்செங்கட்டாங்குடி, ஆக.28- கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி “சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண் ணுரிமைப் பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் சரத்து 51A(h) விளக்கச் சிறப்புக் கூட்டம் நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருச்செங்கட்டாங்குடியில் 25.08.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
கூட்டம் நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப் போலியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, திருமருகல் ஒன்றியத் தலைவர் மு.சின்னதுரை, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு. குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா தொடக்க உரையாற்றினார். அதனை தொடர்ந்து மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி மற்றும் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தின் இறுதியில் இளை ஞரணி பொறுப்பாளர் தீபன் சக்கரவர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர் பாபு இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் கலியமூர்த்தி, கழக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் இரா .இராமலிங்கம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செ.பாக்கியராஜ், ஒன்றிய மகளிரணி ரா.ரம்யா, பகுத்தறிவாளர் கழக தங்கையன், நாகை நகர அமைப்பாளர் சண்.ரவி, அறிவிழிமங்கலம் கு.சிவானந்தம், இரா.சுரேஷ் மருங்கூர் காமராஜ், மகாலிங்கம், அருண், திருசெங்காட்டாக்குடி குருநாதன், நாகை அறிவுசெல்வன், தமிழினி, யாழினி என பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இராமேசுவரத்தில்…
இராமேசுவரம், ஆக. 28- 24.8.2024 அன்று மாலை 5 மணி அளவில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சரம் மற்றும் 51A(h) சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டி இராமேசுவரம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுப.பெரியார் பித்தனின் மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரமாக மந்திரமா, மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி தொடர்ந்து 2:30 மணி நேரம் நடந்தது. இறுதி வரை ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு பயன டைந்தனர். இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எம்.முரு கேசன் தலை மையில் நடந்த கூட்டத்தில், தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, இராமேசுவரம் நகர் மன்ற தலைவர் கே.இ.நாசர் கான், மேனாள் நகர் மன்ற தலைவர் எ.அர்ச்சுனன், நகர் மன்ற துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் சி.பேரின்பம், சமூக ஆர்வலர் பூமிநதன் மற்றும் கழகத் தோழர்கள் தி.மு.க.வினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில்….
இராமநாதபுரம், ஆக. 28- சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா தெருமுனைப் பொதுக்கூட்டம் 11.8.2024 நாள் 6 மணி அளவில் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடந்தது
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வ. அண்ணா ரவி முன்னிலையேற்றார். தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, ராமநாதபுரம் நகர திராவிடக் கழக தலைவர் பழ.அசோகன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பா ஜெயராமன், தங்கச்சிமடம் கழகத் தலைவர் குழந்தை ராயர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜே .ஏ. கெவிக்குமார் ராமநாதபுரம் இளைஞரணி செயலாளர் ஜான் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கழக பேச்சாளர் மாங்காடு மணியரசன் பேச்சை ஆர்வமுடன் கேட்டனர். எழுச்சியாக கூட்டம் நடைபெற்று நிறைவு பெற்றது.
சேலம் – கன்னங்குறிச்சியில்.
கன்னங்குறிச்சி, ஆக. 28- சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) விளக்கப் பொதுக்கூட்டம், சேலம் – கன்னங்குறிச்சியில் பேருந்து நிலையம் அருகில் 22.08.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் – சி.பூபதி வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கன்னங்குறிச்சி பேரூர் செயலாளர் பி.தமிழரசன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஏ.பூபதி, மாவட்டக் கழக காப்பாளர் கி.ஜவகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இ.தமிழர் தலைவர், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜீ, செயலாளர் ச.சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஆத்தூர் விடுதலை சந்திரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு பயனடைந்தனர்.
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஏ.பூபதி, பேரூர் செயலாளர் பி.தமிழரசன், ப.க. தலைவர் வீரமணி ராஜீ, மகளிர் சுயமரியாதை அறக்கட்டளை நிறுவனம் அப்பாவு புவனேஸ்வரி, சேலம் மாவட்ட கழகத் தலைவர் அ.ச.இளவழகன், தலைமைக் கழக அமைப்பாளர்கா.மு.பாலு ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து மேயர் ஆ.இராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இறுதியாக கழகச் சொற்பொழிவாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.
சூரமங்கலம் பகுதி தலைவர் பழ.பரமசிவம், பொன்னம்மாப்பேட்டை பகுதி தலைவர் – சு.தமிழ்ச்செல்வம், பேங்க் இரா.இராசு, ஆ.துரைமருகன், சுஜாதா தமிழ்ச்செல்வம், மகளிர் பாசறை – து.மேகலா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சுந்தரவதனம் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்களும், திராளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இறுதியாக சேலம் மாநகர்ச் செய லாளர் ச.வெ.இராவண பூபதி நன்றி கூற பொதுக்கூட்டம் இனிதே முடிவடைந்தது.
சேலம் – எடப்பாடியில்..
எடப்பாடி, ஆக. 28- எடப்பாடி நகர கழக சார்பில் (மேட்டூர் கழக மாவட்டம்) சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி, மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம் 23.8.2024 அன்று மாலை 6 மணிக்கு எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
எடப்பாடி நகர கழகத் தலைவர் சா.ரவி தலைமை வகித்தார். எடப்பாடி நகரச் செயலாளர் ப.கலைவாணன், பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல், பொதுக்குழு உறுப்பினர் பெ.சவுந்திரராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் நா.நாபாலு அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். தொட்ர்ந்து எடப்பாடி நகரத் தலைவர் சா.ரவி உரையாற்றினார்.
அடுத்து கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் மூடநம்பிக்கைகளை விளக்கி, பொதுமக்கள் சிந்திக்கும்படியாகவும் உரையாற்றினார்.
நிகழ்வில் சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜீ, மகளிர் அணித் தோழியர் கமலம், வாசந்தி – வீரமணி, மேட்டூர் நகரத் தலைவர் இரா.கலையரசன், மேச்சேரி ஒன்றிய தலைவர் – அ.ப.ராஜேந்திரன், தாத்தியம்பட்டி கழகத் தோழர் ஆ.முத்து, ச.கபிலன், மாணவர் கழக மேட்டூர் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிறைவாக, வெண்ணாத்தூர் ஒன்றியத் தலைவர் செல்வக்குமார் நன்றி கூற பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
திண்டுக்கல் தாடிக்கொம்புவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று (27.8.2024) நடைபெற்றது. இதில் கழக பேச்சாளர் அருண்குமார், அதிரடி க.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை, மாவட்டதலைவர், ஆனந்தமுனிராசன், சதாசிவன், வீரபாண்டி ஆகியோர் உடன் உள்ளனர்