அய்ரோப்பாவின் இரண்டா வது பெரிய நகரமாக லண்டன் திகழ்வதோடு மட்டுமின்றி அங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருவ தாக சொல்லப்படுகிறது. தற்போது, லண்டனில் பேசப் படும் வெளிநாட்டு மொழி களில் இந்திய மொழிகள் முத லிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி தற்போது விரிவாக பார்க்க லாம்.
அதாவது, லண்டனில் பேசப் படும் வெளிநாட்டு மொழிகளில் பெங்காலி முதலிடத்தை வகிக்கிறது.
மேலும், ஆங்கில மொழிக்கு அடுத்து தமிழ், குஜராத்தி, உருது, பஞ்சாபி மற்றும் அரபிக் முதலிய மொழிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2015-இல் நடத்திய ஆய்வின் படி லண்டனில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெளிநாட்டு மொழிகளையே அதிகமாக பேசுவதாகவும் மற்றும் போலிஷ், பிரான்சு முதலிய அய்ரோப்பிய மொழிகளும் டாப் 10-இல் இடம் பெற்றுள்ளன.