உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
லக்னோ, ஆக.27- உத்த ரப்பிரதேசத்தில் ஓடும் ரயி லில் இருந்து பெட்டிகள் கழன் றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா ரயில் விபத்து
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே விளங்குகிறது. சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் ரயில்வேயில் பணி புரிகிறார்கள். நாள்தோறும் 2.5 கோடிக்கும் அதிகமானோர் ரெயில்களில் பயணித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒடிசாவின் பால சோரில் இருந்து சென்னை புறப்பட்டு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு- ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத் துக்குள்ளானது. நூற்றுக்கணக்கானோர் உயி ழந்த விபத்தில் ஏராளமானோர் கை, கால்களை இழந்து படுகாயம் அடைந்தனர்.
உயிர் பலி
இந்த ஆண்டு தொடக்கம் முதல் இந்திய ரயில்கள், விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம், ஜார்க்கண்டில் மும்பை- ஹவுரா விரைவு ரயில் தடம் புரண்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். அதே மாதத்தில் மேற்கு வங்காள மாநிலம் டார் ஜிலிங்கில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 15 பேர் உயிரிழந் தனர். கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தில் சண்டிகார்- திப்ரூகர் விரைவு ரயில் விபத் துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர்.
பெட்டிகள் கழன்றன…
மேலும் ஓடும் ரயில்களில் தீ விபத்து, தடம் புரண்டு விபத்து உள்ளிட்டவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் (25.8.2024) ஒரு விபத்து நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத்தில் இருந்து தன்பாத் நோக்கி கங்காசட்லஜ் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. பிஜோனர் அருகே சென்றபோது ரயிலின் 10 பெட்டிகள் திடீரென நடுவழியில் கழன்றன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் ரயில் என்ஜினில் இருந்து தனித்தனியாக கழன்றிருந்த 10 பெட்டிகளை இணைத்தனர். பெட்டியை இணைக்கும் பணி காரணமாக அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுக்காட் டில் ரயில் நின்றதால் அதில் பயணித்த பயணிகள் செய் வதறியாமல் திகைத்தனர்.
ஓடிக்கொண்டிருந்த ரயில் திடீரென நின்றுவிட்ட தால் அவர்கள் பீதிக்குள்ளா னார்கள். பின்னர்தான் பெட் டிகள் கழன்றதும், என்ஜின் மட்டும் சற்று தூரம் சென்று விட்டதும் தெரியவந்தது.
தேர்வு எழுத சென்ற மாணவர்கள்
இதற்கிடையே காவல்துறை தேர்வு எழுதுவதற்காக இந்த ரயிலில் பயணித்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேர தாமதம் காரணமாக கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்த உள்ளூர் காவல் துறையினர், அந்த இளைஞர் கள் தேர்வு எழுத செல்லும் வகையில் பயணிக்க ஏதுவாக பேருந்துகளை ஏற்பாடு செய்தனர்.