அமித்ஷாவை கிண்டல் அடித்த ஒமர் அப்துல்லா
சிறீநகர், ஆக.26 ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டுக் கட்சியின் தோ்தல் அறிக்கையை மக்களுக்கு எடுத்துரைத்த ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘நன்றி’ தெரிவிப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப் துல்லா நேற்று (25.8.2024) தெரி வித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் நடை பெறவுள்ள பேரவைத் தோ் தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி அமைத் துள்ளன. இதைக் கடுமையாக சாடிய ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித்ஷா, தேசிய மாநாட்டுக் கட்சியின் தோ்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப் பிட்டு ராகுல் காந்திக்கு சில கேள்விகளை முன்வைத்தார்.
இது தொடா்பாக செய்தி யாளா்களிடம் ஒமா் அப்துல்லா கூறியதாவது:
தேசிய மாநாட்டுக் கட்சியின் தோ்தல் அறிக்கையை படித்து மக்களுக்கு எடுத்துரைத்த உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அறிக்கையை படிக்க தயாராக இல்லாத சிலரையும் இதன்மூலம் அவா் படிக்க வைத்துள்ளார்.
ஆனால், அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை மட்டும் மேற்கோள் காட்டிய அவா், ஜம்மு-காஷ்மீரில் உள்ள மலைகளின் ஹிந்துப் பெயா்கள் மாற்றப்படும் என்பதுபோன்ற அறிக்கையில் இல்லாத சில வற்றையும் குறிப்பிட்டது வருத்த மளிக்கிறது எனத் தெரிவித்தார்.