*புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, நாள்தோறும் ஒரு தேக்கரண்டி காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
*ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6 மிளகு சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
*புதினாவைக் காய வைத்துப் பொடியாக்கி அதில் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.
*புதினா, கிராம்பு, சோம்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
*புதினா இலைச்சாறுடன் பச்சைக் கற்பூரம் கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும்.
*புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தம் குறையும்.
*புதினா இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குருதியைத் தூய்மையாகும்.
புற்றுநோயைப் புறந்தள்ளும் கேரட் சாறு
*கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் சாறின் எடை 236 கிராம் வரும். கேரட் சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.
*நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் கேரட் சாறு குடித்தால், உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் டாக்சின்களை வெளியேற்றும். புற்று நோய் வராமல் தடுக்கும்.
*கேரட் சாறு குடிப்பதன் மூலம் மனச் சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
*இதனை காலை வெறும் வயிற்றில் குடித்தால் சோர்ந்துள்ள இதய தசைகள் மிருதுவாகும்.
*இதிலுள்ள கரோட்டீனாய்டு சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும்.
*நாள்தோறும் ஒரு டம்ளர் கேரட் சாறு குடித்து வந்தால் சர்க்கரை நோயை தடுப்பதுடன், உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும்.
*தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நாள்தோறும் ஒரு டம்ளர் கேரட் சாறு குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்படும்.