மதுரையில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாடு

viduthalai
2 Min Read

மதுரை, ஆக.25- கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருசக்கர வாகன ரோந்துகளை இயக்க, மாவட்ட காவல் அதிகாரி அர்விந்த் அறிவுறுத்தினார்

அதன் அடிப்படையில் மதுரையில் அலங்கா நல்லூர் காவல் சரகம், நாகமலை, புதுக்கோட்டை காவல் நிலைய சரகம் போன்ற முக்கிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று சட்ட விரோத செயல்கள் பற்றியும், சமூக விரோதிகளின் நடமாட்டம் பற்றியும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 30 வயதிற்கு கீழுள்ள இளைஞர்கள் 100 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குவர். வழிப்பறி நோக்கத்தோடு கத்தியுடன் சுற்றி திரிந்தது, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டது போன்ற குற்றங்களின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்வாகனங்கள் அறிமுகம்!

தமிழ்நாடு

சென்னை, ஆக.25- தமிழ்நாட்டின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வி.ஜி.சந்தோசம் ஆகியோர் சுற்றுச்சூழலுக்கேற்ற இருசக்கர மின்வாகன மாடல்களை அறிமுகப்படுத்தி, புதிய விற்பனையகத்தை திறந்து வைத்தனர்.

பவர்ட்ரான்ஸ் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான, வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் வாகன பிராண்டாகிய டியான் மின்வாகன நிறுவனம், அகஸ்டா எஸ்.பி. இ-ஸ்கூட்டர், அஸ்டா எஃப்.எச். இ-ஸ்கூட்டர் ஆகிய இரண்டு புதிய தனித்துவமான இருசக்கர மின்வாகன மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்நிறுவனம் தனது புதிய விற்பனையகத்தை சென்னை, ராமாபுரத்தில் திறந்துள்ளது.

டியான் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ ஏழு மின்வாகன மாடல்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கென தற்போது மூன்று விற்பனை காட்சியகங்கள், அய்ந்து சர்வீஸ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. விரைவில் ஒரு சேவை வழங்குநருடன் கூட்டாக இணைந்து செயல்படவுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் 256 பழுதுபார்ப்பு சேவை மய்யங்களில் வாடிக்கையாளர்கள் இந்த வாகனங்களுக்கான சேவையைப் பெறமுடியும் என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.ஆண்டனி தாமஸ் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *