சென்னை, ஆக.23 சென்னை எழிலகத்தில் ரூ.5.12 கோடியில் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மய்யமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.8.2024) திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பின ருக்கும் பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் சென்றடைவதை உறுதி செய்வது, முன்கூட்டியே வானிலை எச்சரிக்கைகளை வழங்க வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, வெள்ளத் தணிப்பு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பேரிடர் தொடர்பான பணி களில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், மக்களுக்கு பேரிடர்முன்னெச்சரிக்கை வழங்கும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 1,400 தானியங்கிமழை மானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள், ராம நாதபுரம்,ஏற்காடு பகுதிகளில் 2 ரேடார்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மே ற்கொண்டு வருகிறது. அத்துடன், பல்வகை பேரிடர் முடிவு ஆதார அமைப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மய்யம் மழை, புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஆகியவை குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மையின் இதர துறைகளுக்கும், பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவித்து வருகிறது.
புயல் மற்றும் பருவ மழைக் காலங்களில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்துக்கு நேரில் வந்து, உயர் அதிகாரிகள் மற்றும்மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, மேற்கொள்ள வேண் டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டு வருகிறார்.
இந்நிலையில், 24 மணி நேரமும் செயல்படும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாநில அவசரகால செயல்பாட்டு மய்யம் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில்ரூ.5.12 கோடி செலவில் பலவகை பேரிடர் முன்னெச்சரிக்கை மய்யமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின் மய்யத்தை பார்வையிட்ட முதலமைச்சருக்கு அதன் செயல்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கினார்.
இம்மய்யத்தில், பேரிடர் காலத்தில், முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கும் வகையில் காணொலி வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, பேரிடர் காலங்களில், அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பேரிடர் ஆயத்த நிலை, மீட்பு, நிவாரணப் பணிகளைமேற்கொள்வது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு 70 இருக்கைகள் கொண்ட அரங்கம், பொது மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யும் வகையில் 1070 மற்றும் 112 என்ற கட்டணமில்லா தொலை ப்பேசியுடன் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய அவசரகால அழைப்பு மய்யம், பல்வேறு துறைகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனுக் குடன் எச்சரிக்கை செய்திகள் வழங்கும் வகையிலான பேரிடர் தொழில்நுட்பப் பிரிவு,மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப் படுத்த 48 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் செயல்படும் வகையில் பல்துறை ஒருங்கி ணைப்பு மய்யம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம்,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் துறை செயலர்பெ.அமுதா, பேரிடர் மேலாண்மை இயக் குநர் வி.மோகனச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.