வக்பு மசோதா நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது

1 Min Read

புதுடில்லி, ஆக.23 வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.வக்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்தது. மசோ தாவை ஆய்வு செய்ய மக்களவை பாஜக உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்களை கொண்ட இரு அவைகளின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. இதில் மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்கள் குறித்து சிறுபான்மையினர் விவகாரஅமைச்சக அதிகாரிகள் விளக்கம்அளித்தனர். அப்போது பெண்களுக்கு அதிகாரம் அளிக் கும் விதிகள் உட்பட பல்வேறு திருத்தங்களுக்கு பாஜக உறுப் பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதேவேளையில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது உட்பட பல்வேறு பிரிவுகளின் அவசியம் குறித்து எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.கூட்டத்தில் அவ்வப்போது சூடான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. எனினும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல மணி நேரம் அமர்ந்து, மசோதாவின் விதிகள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவுசெய்து, ஆலோசனைகளை வழங்கினர். மேலும் விளக்கங்களை பெற்றனர்.
மதிய உணவு இடைவெளி யுடன் 6 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் பலன் அளிக்கும் வகையில் இருந்ததாக குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *