பஜ்ரங்தள் தாராசிங் திமிர்வாதம்
புதுடில்லி, ஆக.22 1999ஆம் ஆண்டு கியோஞ்சர் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரவிந்திர பால் என்ற தாரா சிங்கின் மன்னிப்பு மனுவுக்கு ஒடிசா அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் 20.8.2024 அன்று கோரியது.
தாராசிங் தனது மனுவில் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதிக்கும் வகையில் தன் மீது கருணை காட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தலைமை யிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றம் மிகவும் தீவிரமானது என்று குறிப்பிட்டது., ஒடிசா அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அமர்வு கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக வாதிட்ட தாராசிங் தரப்பு வழக்குரைஞர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதே போல் தனது மனுதாரரான தாராசிங்கையும் விடுதலை செய்யவேண்டும் என்று வாதிட்டார்
தாராசின் பலமுறை மன்னிப்புக் கோரியும், மாநில அரசு முன்கூட்டிய விடுதலைக்காக அனுப்பப்பட்ட மனுக் களை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார், இது அரசமைப்பின்
21-ஆவது சட்டத்தின் கீழ் அவருடைய உரிமையை அச்சுறுத்துகிறது.
ஏப்ரல் 19, 2022 அன்று வெளியிடப் பட்ட மன்னிப்பு கொள்கையில் குறிப்பிடப்பட்ட 14 ஆண்டு குறைந்தபட்ச சிறைத்தண்டனையை ஏற்ெகனவே தாராசிங் நிறைவு செய்துவிட்டதாக குறிப் பிட்டு, மன்னிப்புக்கான கோரிக்கையை நியாயப்படுத்தினார்.
தாராசிங் கொலை செய்தது தனிப்பட்ட பகைக்காக அல்ல, தேசத்தை பாதுகாக்கும் ஆசையிலிருந்து உருவானது என்று அவரது வழக்குரைஞர் கூறினார்.
இதேபோன்ற சூழ்நிலைகள் மற்றும் குற்றங்களின் தீவிரத்தை உள்ளடக்கிய பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, சிறையில் நன்னடைத்தை மற்றும் பிற காரணங்களின் அடிப்படையில் ஏற்கெனவே பலரை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தக் காரணங்களின் அடிப்படையில் தனக்கும் விடுதலை வழங் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.