கோலார், ஆக.21 தங்கலான் படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும் கோலார் தங்க வயல் ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றாக திகழ்ந்தது. இது, பெங்களூருவில் இருந்து சுமார் 95 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.
சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் நிறுவனங்கள் வசம் இருந்த இந்தச் சுரங்கங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு பொதுத்துறை நிறுவனமான பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் (BGML) வசமாயின. 121 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தத் தங்கச் சுரங்கத்தில், 1950-களுக்குப் பிறகு தங்கம் கிடைப்பது அரிதாகிக் கொண்டே வந்த நிலையில், 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி அது மூடப்பட்டது.
அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் இன்றைய நிலை என்ன? பிபிசி நேரடியாக அங்கு சென்று கள ஆய்வு செய்தது.