சென்னை, ஆக. 21- தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை யில் (19.8.2024) வெளியிட்டு செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
நிகழாண்டு தனியார் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்துள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று விண் ணப்பித்திருக்கிறோம். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 28,819 பேரில் 21,028 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3,683 பேரில் 3,211 பேரும் முந்தைய ஆண்டு மாணவர்கள். 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அனைவரும் முந்தைய ஆண்டு மாணவர்கள்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இடங் களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் சைதாப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி மய்யத்தில் படித்தவர்கள்.
திருநங்கை:
நிகழாண்டில் ஈரோட்டைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.