மூடநம்பிக்கை எதிர்ப்பு! ரூ.5 கோடி பரிசும் – நழுவிய வாஸ்து சாஸ்திர நிபுணரும்!!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்கள்… சில நேரங்களில் சவால்களும் பகுத்தறிவாளர்களால் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் மூடநம்பிக்கைக்கு எதிரான ஃபவுண்டேஷன் ஜேம்ஸ் ரேண்டி என்பவர் ரூ.5 கோடி பரிசை அறிவித்திருந்தார்
இதைப் பார்த்த ஆந்திராவின் பகுத்தறிவு அமைப்பான ஜன விஞ்ஞான வேதிகா இந்த அறிவிப்பை ஆதாரமாகக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிப்படையான பிரச்சாரத்தை மேற்கொண்டது.
இச்செய்தியை மோப்பம் பிடித்த காங்கேயம் அருகில் உள்ள ஊதியூர் பழனிச்சாமி என்பவர் வாஸ்து சாஸ்திர நிபுணர் என்று தன்னை அறிவித்துக் கொண்டு ஜன விஞ்ஞான வேதிகா அமைப்புக்கு எதிராக தம்மால் வாஸ்துவை நிரூபிக்க முடியும் என்றும் 5 கோடி ரூபாய் பரிசை ஜன விஞ்ஞான வேதிகா வழங்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில் அவரை தாராபுரத்திற்கு நேரடியாக அழைத்து ”அய்யா நீங்கள் ஆந்திராக் காரர்களிடம் நிரூபிக்கப் போவதை விட எங்களி டமே நிரூபித்து காட்டுங்கள் அப்படி நிரூபித்து விட்டால் நாங்கள் உங்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம் நிருபிக்காவிட்டால் எங்கள் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருங்கள் என்று சவாலுக்கு அழைத்தோம்.
ஆனால் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஊதியூர் பழனிச்சாமி ஆந்திராவில் அப்படி ஓர் அமைப்பே இல்லை என்றும் பார்ப்பன ஊடகங்ககளைக் கொண்டு கட்டமைத்தார்.

பலமுறை அழைத்தும் வர மறுத்துவிட்டு ஆந்திராக்காரர்களோடு வம்புக்கு நின்றார். ஒரு கட்டத்தில் ஜன விஞ்ஞான வேதிகாவின் எண்களை இணையம் வழியாக எடுத்து தொடர்பு கொண்ட போது அவ்வமைப்பினுடைய இணைச் செயலாளர் காந்தாராவ் பழனிச்சாமியின் தொந்தரவுகளையும் எடுத்துக் கூறினார். அப்போது அவர்களுக்கு நமது திராவிடர் கழகத்தின் தலைமையை தொடர்பு கொண்டு பழனிச்சாமியின் மூடநம்பிக்கை பிரச்சாரத்தை அறுத்தெறிய அருமையான வாய்ப்பு என எடுத்துக் கூறினேன்.
திராவிடர் கழக தலைமையின் வழியாக ஈரோடு த.சண்முகம் (தலைமைக்கழக அமைப்பாளர்) மூலமாக காங்கேயம் நீதிமன்றத்தில் எதிர் தரப்பு வாதங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிறகு இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாறியதாக சண்முகம் அவர்கள் தெரிவித்தார். திராவிடர் கழகத்தின் கூர்மையான, மூடநம்பிக் கைக்கு எதிரான, அறிவியல் ரீதியான வாதங்களை முன்வைத்த பிறகு பழனிச்சாமி பின்வாங்கி தன் வாலை சுருட்டிக்கொண்டார்.
திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு பிரச்சார முன்னெடுப்புகளில் இவ்வெற்றி ஒரு மைல் கல்.

– பெரியார் குயில், தாராபுரம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *