சென்னை, ஆக.21- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 3500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் 3500 வகுப்பறைகள் தேவைப்படும் இடங்களில் கட்டப்படும்.
மேலும் அரசு பள்ளிகளில் “ஹைடெக் லேப்” மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேர காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
அதோடு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கணக்கெடுத்து தேவைப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் படுவதோடு அரசு பள்ளிகளுக்கு கழிப்பறைகளும் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறினார்.
ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவச மின் ஆட்டோ அரியலூா், ஆக.21- அரியலூரில் ஊா்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவச மின் ஆட்டோ நேற்று (20.8.2024) வழங்கப்பட்டது.
அரியலூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்து, 2021-இல் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவா் செல்வம்(42). இவருடைய மனைவி செ.பிரியங்காவுக்கு(35) கடந்த 2022 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் ஊா்க்காவல் படையில் வேலை வழங்கப்பட்டது.
இதனிடையே, பிரியங்காவின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையை உயா்த்தும் பொருட்டு அரியலூா் மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் அரியலூா் மாவட்ட ஊா்க்காவல் படை வட்டார தளபதி செ.ஜீவானந்தம் ஆகியோரின் நிதியுதவியில் மின் ஆட்டோ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நேற்று (20.8.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ், பிரியங்காவிடம் ஆட்டோவுக்கான சாவியை வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா், ஊா்க்காவல் படை வட்டார தளபதி செ.ஜீவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.