நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுத் தலைவர் கே.சி.வேணுகோபால் மேலும் 4 குழுக்கள் அமைப்பு

1 Min Read

புதுடில்லி, ஆக. 19- ஒன்றிய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும், அக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி.வேணுகோபால் நியமிக்கப் பட்டுள்ளாா்.
முன்னதாக, இந்தக் குழுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் அதிபா் ரஞ்சன் சவுத்தரி கடந்த 5 ஆண்டுகளாக தலைமை வகித்த நிலையில், தற்போது 18-ஆவது மக்களவையில் கே.சி.வேணு கோபால் தலைமையில் இக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மேலும் 4 புதிய நாடாளுமன்றக் குழுக்களை அமைத்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டுள்ளாா். தோ்தல் மூலமாக அல்லாமல், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இக் குழுக்கள் இம்முறை அமைக்கப் பட்டுள்ளன. 4 புதிய நாடாளுமன்ற குழுக்களுக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிவிக்கை யில் கூறியிருப்பதாவது:
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில் திட்ட செலவின மதிப்பீடுகள் குழுவும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வைஜெயந்த் பாண்டா தலைமையில் பொதுத் துறை நிறுவனங்கள் குழுவும் அமைக்கப் பட்டுள்ளன.
தாழ்ததப்பட்ட மற்றும் பழங் குடியினா் நல நாடாளுமன்றக் குழுவுக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஃபகன் சிங் குலாஸ்தே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) நல குழுவுக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளாா். ஓராண்டு காலம் செயல்படும் இந்தக் குழுக்களில் இரு அவை நாடாளுமன்ற உறுப் பினர்களும் உறுப்பினா்களாக இடம் பெற்றிருப்பா்.
ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் செயல் பாடுகளைக் கண்காணிக்கும் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இன்னும் அமைக்கப்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *