போபால், ஆக.18 ‘இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர்கள், பெரிய பதவி கிடைத்ததும், செய்யும் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை…’ என, மத்தியப் பிரதேச முதல மைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவ் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள்.
இங்கு கடைசியாக நடந்த சட்டமன்ற தேர் தலில்பா.ஜ., வெற்றி பெற்றதும் சிவ்ராஜ் சிங் சவுகான் தான், மீண்டும் முதலமைச்சராவார் என அனைவரும் எதிர்பார்த் தனர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், அதிகம் பிரபலம் இல்லாத மோகன் யாதவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது. துவக்கத்தில் சற்று அப்பாவியாக காட்டிக்கொண்ட மோகன் யாதவ், இப் போது, தன் அரசியல் விளையாட்டுகளை துவக்கி விட்டார்.
மக்களவை தேர்தலுக்கு முன், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்பவருக்கு வனத்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார். மத்தியப் பிரதேசத்தில் சில மாவட்டங்களில் இவருக்கு செல்வாக்கு இருப்பதால், அதை தனக்குசாதகமாக பயன்படுத்த, அவருக்கு அமைச்சர் பதவியை மோகன் யாதவ் வழங்கியுள்ளார். ஆனால், இந்த நட வடிக்கை பா.ஜ.,வில் உள்ள எம்.சட்டமன்ற உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘பல ஆண்டு களாக கட்சியில் இருக்கி றோம். எங்களுக்கு அமைச்சர் பதவி தராமல், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு எப்படி கொடுக்கலாம்…’ என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
‘இந்த சவாலை மோகன் யாதவ் எப்படி சமாளிக்கப்போகிறார் என பார்ப்போம்…’ என்கின்றனர், ம.பி., அரசி யல்வாதிகள்.
ம.பி. பிஜேபி ஆட்சியில் குழப்பம்
Leave a Comment