ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாக லட்சணம் பாரீர்! மீண்டும் ஒரு ரயில் விபத்து 17 நாள்களில் 21 விபத்துகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கான்பூர், ஆக.18 அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் 17.8.2024 அன்று கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
உத்தரப் பிரேதசம் மாநிலம் வாரணாசியிலிருந்து அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் இருந்த பயணிகள், ஊழியர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
வாரணாசியிலிருந்து அகமதா பாத் வரை (19168) இயக்கப்படும் சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 20 பெட்டிகள், 17.8.2024 அன்று அதிகாலை உத்தரப் பிர தேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தின் குறுக்கே இருந்த அடையாளம் தெரியாத பொருளின் மீது ரயில் மோதியதால் தடம் புரண்டது. ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ” பாறாங்கற்கள் போன்ற பொருள் இன்ஜினின் முன்பகுதியில் மோதியதில் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து வளைந்துவிட்டதாக லோகோ பைலட் கூறினார்” என்றனர்.
ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3 ரயில்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
விபத்து நடந்த பகுதியை மேற்பார்வையிட்ட வட மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) சஷி காந்த் திரிபாதி, விபத்து நடந்த இடத்திலிருந்து கான்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.
மேலும் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவ ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது. அந்தந்த ரயில் நிலையத்திற்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ்: 0532-2408128, 0532-2407353, கான்பூர்: 0512-2323018, மிர்சாபூர்: 054422200097, எட்டாவா: 73929597 303994411 , கோரக்பூர்: 0551-2208088. விரங்கனா லக்ஷ்மிபாய் ஜான்சி சந்திப்பு -0510-2440787 மற்றும் 0510-2440790. ஓரை -05162-252206, பண்டா-05192-227543, லலித்பூர் ஜேஎன் – 07897992404.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *