சென்னை, ஆக.18 தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 22 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மய்யம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரவு இதையடுத்து 22 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அவசர உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கன மழை எச்சரிக்கை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனே மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
24 மணிநேரமும் வெள்ளத் தடுப்புக்காக உஷாராக இருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
22 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர உத்தரவு
Leave a Comment