மும்பை, ஆக.18- ஜம்மு – காஷ் மீர், அரியானா மாநிலங்களுடன் சேர்த்து மராட்டிய சட்டமன் றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப் படாததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் அட்டவணை
மராட்டிய சட்டமன் றத்தின் பதவி காலம் நவம்பர் 26ஆம் தேதி யுடன் நிறைவு பெறு கிறது. எனவே, வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத் தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 16.8.2024 அன்று ஜம்மு- காஷ்மீர் மற்றும் அரி யானா மாநிலங்களுக்கு தேர்தல் அட்டவணையை வெளியிட் டது. ஆனால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இதுகுறித்து உத்தவ் பாலா சாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மேனாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது-
முதலாளியின் அனுமதி
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறிக்கொண்டு இருக்கும்போதும், ஜம்மு-காஷ்மீர், அரியானாவுடன் ஒரே நேரத்தில் மராட் டியத்திற்கு தேர்தல் நடத் தப்படவில்லை. இதற்கு தேர்தல் பாதுகாப்பை இந் திய தேர்தல் ஆணையம் மேற்கொள் காட்டுகிறது.
மராட்டியத்தில் தேர்தல் நடத்த அவர் களின் முதலாளி இன்னும் அனுமதி வழங்க வில்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போலி வாக்குறுதிகள்
இதேபோல தேசிய வாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியதாவது:-
மராட்டிய தேர்தல் அட்ட வணையை அறிவிக்காததற்கு காரணம் என்னவெனில், ஆளும் கூட்டணி மாநில மக்களை தங்கள் போலி வாக்குறுதிகள் மூலம் முட்டாளாக்க அதிக நேரத்தை விரும் புவதுதான்.
ஆளும் கூட்டணிக்கு மராட்டிய வாக்காளர்கள் நடந்து முடிந்த நாடா ளுமன்ற தேர்தலில் தோல்வியை கொடுத்த தால், தேர்தல் ஆணை யத்தின் உதவியுடன் மேலும் நேரத்தை பெற் றுள்ளனர். ஆனால் மராட்டிய மக்கள் புத்தி சாலிகள் என்பதால் இந்த தந்திரங்கள் எது வும்வேலை செய்ய போவதில்லை. வருகிற மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் மீண்டும் பா.ஜனதா கூட்டணியை நிராகரிப் பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.