புதுடில்லி, ஆக.18 இந்தியாவில் மருத்துவ வசதிகள் சென்று சேராத பகுதிகளுக்கு மருத்துவமனை சேவைகளை வழங்குவ தற்கான முயற்சியின் முக்கிய பகுதியாக உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையை இந்திய ராணுவம் பரிசோதித்துள்ளது.
மலையாக இருந்தாலும், காடாக இருந்தாலும் எங்கும் எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் கியூப் எனப்படும் உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்ட இந்த போர்ட்டபிள் மருத்துவமனை உலகின் முதல் போர்ட்ட பிள் மருத்துவமனையாக உள்ளது.
BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita & Maitri) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களிலும், மனிதாபிமான நெருக்கடி சமயங்களிலும் சிக்கலான நிலப்பரப்புகளில் உபயோகிக்க ஏதுவாக இந்த மருத்துவமனை உருக்காகியுள்ளது.
தற்போது இந்திய ஆயுதப் படையும் வான் படையும் இணைந்து பாராசூட் மூலம் லடாக்கில் 15,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் இந்த போர்ட்டபிள் மருத்துவமனையை எடுத்துச்சென்று நிலைநிறுத்திப் பரிசோதித்துள்ளது. இது ஒரு மைல்கல் சாதனை என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவத்தினர் மருத்துவமனையை 15,000 ஆதி உயரத்தில் உள்ள பகுதியில் நிலை நிறுத்தும் காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.