சென்னை,ஆக.17- தமிழ்நாட்டு ரயில்வே திட்டங் களுக்கு இதயமே இல்லாமல் ரூ.1,000 ஒதுக்குவதா? என்று ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
துரோகம்
தி.மு.க. பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி..ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:-
நிதி அறிக்கையில் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, ரயில்வே திட்டங் களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் முடிந்த பிறகு ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப் பூர்வமான ‘பிங்க்’ புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில் தான் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பொது வாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுமே ரயில்வே ‘பிங்க்’ புத்தகம் அவையில் வைக்கப்பட்டு விடும். இது காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை இந்த பட்ஜெட்டில் ஏனோ பின்பற்ற வில்லை.
நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடர் முடித்தப் பிறகு ‘பிங்க்’ புத்தகம் வெளியிட்டிருப்பதே இவர்க ளின் சதியை வெளிக்காட்டி யிருக்கிறது. தமிழ்நாடு, புதுச் சேரியின் 40-க்கு 40 வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றதை தாங்கிக்கொள்ளமுடியாமல் வயிற்றெரிச்சலோடு நிதி ஒதுக் கீடுகளை எல்லாம் குறைத்தி ருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக் கால பட்ஜெட்டின் ‘பிங்க்’ புத்தகத்தில் தெற்கு ரெயில் வேயின் புதிய வழித்தடங்க ளுக்கு ரூ.976 கோடி ஒதுக்கப் பட்டிருந்து. ஆனால், இப் போது வெளியான ‘பிங்க்’ புத்தகத்தில் அந்ததொகையை ரூ.301 கோடியாக குறைத்து விட்டார்கள். அதாவது மூன்றில் ஒருபகுதியாக்கிவிட் டார்கள்.
பிச்சை போடுவது போல…
புதிய ரயில்வே திட்டங் களை அறிவிப்பதற்கு பதிலாக ஏற்ெகனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதிட்டங்களின் நிதியை பெருமளவில் குறைத் தது இதுவரை ரெயில்வே துறையில் நடக்காத ஒன்று. இதயமே இல்லாமல் தமிழ் நாட்டில் செயல்படுத்தப் படும் முக்கிய ரெயில் திட் டங்களுக்கு 1000 ரூபாயை பிச்சை போடுவது போல போட்டிருக்கிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது. 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்த
விழாவிற்கு செய்த செலவு ரூ.5.6கோடி அளவுக்குக்கூட பெற தகுதி யில்லாத மாநிலமா தமிழ்நாடு?
கடந்த 2 ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத ஒன்றிய அரசு, பா.ஜனதா ஆளும் பல மாநில மெட்ரோ பணிகளுக்கு கோடிகளை கொட்டி கொடுத்திருக்கிறது. ஆட்சி அமைக்க வாக்களிக் காத மக்களுக்கும் சேர்த்து தான் ஒரு அரசு செயல்படும். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்ட ணிக்கு வாக்களிக்காதபெண் களுக்கும் சேர்த்துதான் 1.15 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அரசு செயல்படுத்திவரு கிறது. அப்படித்தான் பா. ஜனதாவுக்கு எம்.பி.க்கள் தராத மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒன்றிய அரசால் நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.