புதுடில்லி, ஆக.17 அநீதிக்கு எதிராக போராடும் உங்களுக்கு ‘‘இந்தியா கூட்டணி’ துணையாக இருக்கும் என திகார் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.
டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதமும், சி.பி.அய்.யால் கடந்த ஜூன் மாதமும் கைது செய்யப்பட்ட டில்லி ஆம் ஆத்மி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (16.8.2024) அவருக்கு 56 ஆவது பிறந்த நாளையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சி யுடனும் வாழ உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து, அநீதியை எதிர்த்து போராடும் உங்களுக்கு இந்தியா கூட்டணி எப்போதும் துணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.