மன்னிப்புக் கேட்டும் புத்தி வரவில்லை அலோபதி நச்சு மருந்து-மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்

2 Min Read

டில்லி, ஆக. 17- அலோபதி நச்சு மருந்துகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்து வருவதாக யோகா குரு பாபா ராம்தேவ் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக இதுபோன்று தவறான தகவல்களை வெளியிடுவதாக அவர் மீது ஏற்கனவே புகார்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது அலோபதி மருந்து குறித்து பேசியிருப்பது மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.

பதஞ்சலி என்ற பெயரில் பாபா ராம்தேவ் தனது தயாரிப்புகளை மார்க்கெட்டில் கொண்டுபோய் சேர்ப்பதற்காகவும், பொதுமக்களைக் கவர்வதற்காகவும் தவறான விளம்பரங்களை வெளியிடுவதாக தொடர்ந்து அவர் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பதஞ்சலி விளம்பரங்களைத் தடை செய்யக் கோரி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமனத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

செய்தித்தாள்கள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சிறிய, சிறிய விளம்பரங்கள் மூலம் பதஞ்சலி நிறுவனத்தினர் மன்னிப்பு கோரியிருந்தனர். இதையடுத்து, இனி தவறு நடக்காது என்று உத்தரவாதம் அளித்ததையடுத்து உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வழக்கை முடித்துவைத்தது. இந்நிலையில், தற்போது அலோபதி மருந்துகளால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுத்துவதாக பாபா ராம்தேவ் பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், நோய்களை நீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. அலோபதியின் நச்சு மருந்துகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனாலும், ஆயுர்வேத மருத்துவத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறாமலேயே உள்ளது. எனவே, உள்நாட்டு மருத்துவத்துக்கான போராட்டத்தில் எங்களது முயற்சி களை மேலும் தீவிரப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே தவறான தகவல் களை வெளியிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டிருந்தார். வழக்கு முடிந்து ஒருவாரத்துக்குள் அலோபதி மருந்து குறித்து மீண்டும் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *