கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.8.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாஜக அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிக்கிறது: காங். தலைவர் கார்கே காட்டம்

*ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காண்பிக்கப் படுகிறது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீதிமன்றத்தில் முறையிட்டு நிதி பெறும் சூழல் உள்ளது. சித்தராமையா குற்றச்சாட்டு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பொங்கல் முதல் குறைந்த விலையில் மருந்துகள் – 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: சுதந்திர நாள் உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சுதந்திர நாள் உரை ஆற்றிய பிரதமர் மோடி மதம் சார்ந்த சிவில் சட்டம் என்று கூறியது அம்பேத்கரை அவமதிப்பதாகும். இதில் மோடி தவறான தகவல்களை தருகிறார். 1950-களின் நடுப்பகுதியில் ஹிந்து தனிநபர் சட்டங்களில் மாற்றத்தை விரும்பியவர் அம்பேத்கர். ஆனால் இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*மகாராட்டிர துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார், பழங்குடியினர், எஸ்சி, ஓபிசி, சிறுபான்மையினர் போன்றோரின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தி டெலிகிராப்:

* அயோத்திக்கு பயணிகள் செல்லாததால், விமான நிலையம் வறண்டு காணப்படுகிறது. ஏழு மாதங்களுக்குள், குறைந்த பட்சம் 13 நகரங்களில் இருந்து தினசரி விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன, அவை அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *