பூதலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
திருக்காட்டுப்பள்ளி, ஆக. 16– தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 15-08-2024 வியாழன் மாலை6.30 மணி அளவில் திருக்காட்டுப்பள்ளி கரிகாலன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன் கடவுள் மறுப்பு கூறினார் பெரியார் பிஞ்சு அரஞ்ஜெயன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பூதலூர் ஒன்றிய கழகத் தலைவர் அகரப்பேட்டை மா.வீரமணி நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாட வேண்டியது அவசியம் குறித்தும் தந்தை பெரியாருக்கு மறைந்து 50 ஆண்டுக்குப் பிறகும் திராவிடர் கழகத்தை எழுச்சியோடு வழிநடத்தி பெரியார் உலகமயம், உலகம் பெரியார்மயம் என்ற முழக்கத்துடன் நாளும் உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப் பரிய பணிகள் குறித்தும் கழகத் தோழர்கள் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டியது அவசியம் குறித்தும் தொடக்க உரை யாற்றினார்.
தொடர்ந்து ஒன்றிய செயலாளர் அல்லூர் இரா.பாலு ஒன்றிய துணைத் தலைவர் முல்லைக்குடி ரெ.புகழேந்தி திருக்காட்டுப்பள்ளி நகரத் தலைவர் இஸ்மாயில் நகர செயலாளர் குமார் பூதலூர் நகரத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் செல்லமுத்து நகர செயலாளர் ஜெயச்சந்திரா சந்தானம் அந்தோணிராஜ், வளப்பக்குடி தங்கவேலு, விண்ணமங்கலம் நடராஜன், ஒன்றிய ப.க செயலாளர் சிவசாமி பிரபு, கழக பேச்சாளர் கலைவாணி வீரமணி தஞ்சை மாநகர இணை செயலா ளர் இரா.வீரக்குமார் மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச. அழகிரி பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல் மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஆகியோர் உரைக்கு பின் இறுதியாக தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் பூதலூர் ஒன்றியம் கல்லணை தொடங்கி அனைத்து பகுதிகளின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் வருகை தந்ததை நினைவு கூர்ந்தும் மீண்டும் தோழர்கள் களப்பணி ஆற்றி அமைப்பை கட்டமைக்க வேண்டும் என உரையாற்றினார்.
திருக்காட்டுப்பள்ளி நகரத் தலைவர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
சுயமரியாதை சுடரொளிகள் திருச் சனம் பூண்டி மாந்துறை அகரப்பேட்டை ஜெயச்சந்திரன் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும் வீரவணக்கமும் தெரிவிக்கப்பட்டது.
4.8.2024 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்து எனவும்,
சுயமரியாதை இயக்க நூற்றாண்டை ஒட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 A H பிரிவு விளக்க பொது கூட்டத்தை பூதலூர் சந்தானம் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டமாக 31-08-2024 அன்று பூதலூரில் மிகச் சிறப்பாக நடத்துவது எனவும்,
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழாவினை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் 17.9.2024 அன்று பூதலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவது பேரணியாக சென்று கிளைகள் தோறும் கழகக் குடியேற்றி எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும்,
தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 26.8.2024 தஞ்சை பாரத் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுபோட்டியில் பெருவாரியான மாணவர்களை பங்கேற்க செய்வது எனவும்,
பூதலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது எனவும்,
39-ஆம் மணவிழா காணும் வீரமணி கலைவாணி வாழ்விணையர்களுக்கு வாழ்த்து.
திண்டுக்கல்லில் நடைபெற்ற பகுத்தறிவாளர்கழக மாநாட்டு மேடையில் ஆடி மாதம் சனிக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் மணவிழா நடத்தி கொண்ட வாழ்விணையர் அகரப்பேட்டை வீரமணி-கலைவாணி ஆகியோரின் 39 வது திருமண நாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் பயனடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.