சென்னை,ஆக.15- டைப் 1 நீரிழிவு நோயாளிகளை கண்காணிக்கும் திட்டத்தை சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (14.8.2024) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர், தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் டைப் 1 நீரிழிவு நோய் அமைப் புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நீரழிவு நோய்க்கான விழிப்புணர்வு கையேட்டினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளி யிட்டார். இதனைத் தொடர்ந்து, டைப்-1 நீரழிவு நோய்க்கான இணைய பதிவேட் டினை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவிலான டைப் 1 நீரழிவு நோய்க்கான இணைய பதிவேட்டை தொடங்கி, அதன் மூலம் நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடு தான்.
இந்த டைப் 1 நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் இளம் வயதினர் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. ஆனால் அவை அறியப்படாமல் வயது அதிகரித்த பின் கண்டறியப்படுகின்றனர். இந்த இணையதள பதிவேட்டின் மூலம் பாதிக்கப் பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்றார்.
உதாரணத்திற்கு, 10 வயதில் ஒரு இந்தியர் டைப் 1 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டால், அவருடைய வாழ்க்கை சராசரியாக 32 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது. அதுவே, வளர்ந்த நாடுகளில் டைப் 1 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வாழ்பவர் களின் காலம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இந்த அறிவியல் மாற்றத்திற்கு காரணம் இந்தியர்களின் உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற் பயிற்சி பழக்கமாகும். எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் சரியான உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்
“ஒரே ஆண்டில், சென்னையில் பிறந்த
5,600 குழந்தைகளுக்குத் தமிழ் பெயர்”
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரே ஆண்டில் 5,600 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 46,91,138 பேர் இது வரை பயனடைந்து வந்தனர். இதில் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோயினால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 76 ஆயிரத்தி 67 பேர். எனவே, இரண்டிற்கும் சேர்ந்து 88 லட்சத்து 67ஆயிரத்தி 105 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் காரணமாகத்தான் தொற்றாத நோய்களின் மூலம் ஏற்படும் இறப்பு கள் தமிழ்நாட்டில் மிகக் கணிசமாக குறைந்திருக்கிறது. எனவே, இந்த போர்டல் மூலம் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப் படும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தினருக்காக தனி பட்டியலை தயார் செய்து, அவர்களுக்கு ஏற்ற மருத்துவ வசதிகளை அமைத்து கண்காணிப்பட உள்ளது” என தெரி வித்தார்.
டைப் -1 நீரழிவு நோய்என்பது உடலில் இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் கணையம் பாதிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் என்பது ரத்தத்தின் சர்க்கரைநோய் அளவை பராமரிப்பதில் பெரும்பங்காற்றும் நிலையில், டைப் 1 நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் இன்சுலின் சிகிச்சையைசரியான முறையில் எடுக்காவிட்டால் தீவிர பாதிப்புகளை உருவாக்குகிறது.
இதில் முதன்மையாக சிறுநீரகங்கள், நரம்புகள், கண்கள் போன்ற உறுப்பு கள் அதிக பாதிப்படைகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, டைப் 1 நீரிழிவு நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 8,60,423 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான பாதிப்பாளர் கள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்களாக இருக்கின்றனர்.