சென்னை, ஆக. 14– ‘’இந்தியாவின் கல்வி ஆற்றல் மய்யமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவில் பதிவிட்டிருப்பதாவது:–
இந்தியாவின் கல்வி ஆற்றல் மய்யமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது! NIRF Rankings 2024-இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்பதுடன், தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயித்துள்ளது.
நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம்!
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தாய்ப்பான திட்டங்களின் மூலம் நமது மாணவர்கள் உயர்கல்வியில் மென்மேலும் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.