புதுடில்லி, ஆக.14- ‘செபி’ தலைவர் அளித்த பதில், அவர் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதை உறுதிப் படுத்துகிறது என்று ஹிண் டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது பங்குச் சந்தை முறைகேடு குற்றச் சாட்டுகளை சுமத்தியது. அந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே (செபி) விசாரிக்கட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
இதற்கிடையே, அதானி குழும நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங் களில் ‘செபி’ தலைவர் மாதபி புச், அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக கடந்த 10.8.2024 அன்று ஹிண்டன்பர்க் புதிய குற்றச் சாட்டுகளை தெரிவித்தது. அதற்கு ‘செபி’ தலைவரும், அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்தனர். முதலீடு உறுதி இந்நிலை யில், ஹிண்டன் பர்க் நிறுவனம், 12.8.2024 அன்று தனது ”எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் புதிதாக ஒரு பதிவு வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் கூறியிருப்ப தாவது:-
‘செபி’ தலைவர் எங்க ளது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். ஆனால், அவர் அளித்த பதில், புதிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.பெர்முடா, மொரீஷியஸ் நாடுகளை சேர்ந்த சந்தேகத்துக்குரிய நிதியங்களில் அவர்கள் முத லீடு செய்ததை பகிரங்கமாக உறுதிப்படுத்துகிறது.கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி முறை கேடாக சேர்த்த பணத்தையும் அதில் முதலீடு செய்துள்ளார்.
அந்த நிதியம், தனது கணவர் தவல் புச்சின் சிறுவயது நண்பரால் நடத் தப்பட்டது என்பதையும் மாதபி புச் உறுதிப்படுத்தி உள்ளார். அந்தநேரத்தில் அந்த நண்பர், அதானி குழு மத்தின் ஒரு இயக்குநராக இருந்தார். அதானி விவ காரம் தொடர்பான முதலீட்டு நிதி யங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை ‘செபி’ ஏற்றுள்ளது. அவற்றில், மாதபி புச் முதலீடு செய்த நிதியங்களும் அடங்கும். இது, நலன் முரண்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.
இதை எங்கள் அறிக்கை யில் சுட்டிக்காட்டி இருக் கிறோம். மாதபிபுச் இந்தியாவில் ஒன்றும் சிங்கப்பூரில் ஒன்றும் என 2 ஆலோசனை நிறுவனங்களை அமைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 2017ஆம் ஆண்டு, தான் ‘செபி’யின் முழு நேர உறுப்பினர் ஆன வுடன் அந்த நிறுவனங்கள் செயலற்றதாகி விட்டதாக வும், 2019ஆம் ஆண்டு அந்நிறுவனங்களை தனது கணவர் ஏற்று நடத்தியதாக வும் கூறியுள்ளார்.
ஆனால், கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவர பங்கு முதலீட்டாளர்கள் பட்டியல்படி, அவர் தொடங்கிய அகோரா அட் வைசரி லிமிடெட்டின் 99 சதவீத பங்குகள் இன்னும் மாதபி புச்சிடம்தான் இருக்கின்றன. அவருடைய கணவரிடம் இல்லை. மேலும், சிங்கப்பூர் நிறுவனத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி வரை, மாதபி புச் 100 சதவீத பங்குகளை வைத்திருந்தார். ‘செபி’தலைவர் ஆன 2 வாரங்களுக்கு பிறகுதான் அந்த பங்குகளை கணவர் பெயருக்கு மாற்றினார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.