பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலைஞரின் நினைவு நாள் சிறப்புக் கூட்டம் 10.8.2024இல் அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அனைவரையும் முனைவர் சுலோசனா வரவேற்றார். வேண்மாள் நன்னன் சிறந்ததொரு தலைமையுரை வழங்கினார். பாவலர் மீனாட்சிசுந்தரம் சிறப்புரையாற்ற, பத்திரிகையாளர் ப,திருமாவேலன் எழுதிய கலைஞரின் பெரியார் நாடு என்ற நூலை திறனாய்வு செய்து கலைஞரின் சாதனைகள், அவர் செய்த மக்கள் நலப் பணிகளை பட்டியல் போட்டு வழங்கினார். நிகழ்ச்சிக்கு சிகரம் வைத்தது போன்று கழக பொருளாளர் வீ.குமரேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அறிவொளி தாமோதரன் ஒளிப்பதிவு செய்தார். ஆ.வெங்கடேசன் நன்றிகூறினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞரின் நினைவு நாள் சிறப்புக் கூட்டம்

Leave a Comment