கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

14.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* செபி – அதானி தொடர்பு பற்றி ஜேபிசி விசாரணை கோரி 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு.
* வளர்ந்த இந்தியா (விக்‌ஷிட் பாரத்), திராவிட மாடலை பின்பற்றினால் மட்டுமே சாத்தியம், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மைனாரிட்டி பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஒன்றிய அமைச்சர் அதாவாலே, இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என பேட்டி.
* மருத்துவப் படிப்பில் இ.டபிள்யு.எஸ். இடஒதுக் கீட்டிற்கு தடை: கூடுதல் இடங்களை அதிகரிக்காமல், மருத்துவப் படிப்பில் 10 சதவீத உயர்ஜாதி அரிய வகை ஏழைகள் இட ஒதுக்கீடு (இ.டபிள்யு. எஸ்.) அளிக்க முடியாது என ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பணிக்கு வராமல், ஊதியம் பெறும் குஜராத் ஆசிரியர்கள்: 150க்கும் மேற்பட்ட ‘காணாமல் போன’ குஜராத் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர்
* 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் கூட்டாளி தேவநாதன் தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.
*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மூலம் மாதாந்திர கவுரவத் தொகையாக ரூ.1,000 பெறும் 10 லட்சம் பயனாளிகளில், அவர்களில் 60% பேர் ஒரே மாதத்தில் முழுத் தொகையையும் திரும்ப பெறாமல் இருப்பது ஆரோக்கியமான போக்கைக் காட்டுகிறது. பெண்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தின் ஒரு பகுதியை சேமித்து வருவதாக கூட்டுறவு துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
* NIRF தரவரிசை: அரசு நிதியுதவி பெறும் நிறுவனங் களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய கல்வி தரவரிசையில் தமிழ்நாடு தான் முதலிடம் – காரணம் திராவிட அரசுதான்- கல்வியாளர் கருத்து
தி இந்து:
* வக்பு வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவராக பாஜக மூத்த எம்பி ஜகதாம்பிகா பால் நியமனம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கல்லூரி பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் சேர்க்கப்படுவதை மத்திய பிரதேச அரசு கட்டாயமாக்கியுள்ளது. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.
* தெலங்கானாவில் தன்னைப் புத்துயிர் பெறச் செய்ய, தமிழ்நாட்டில் திமுக எப்படி வலுவாக கட்டமைப்புடன் கட்சியை நடத்துகிறது என அறிந்திட, சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் திமுக தலைவர்களுடன் சந்திப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *