ஒசூர் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பளிப்பதென மாவட்ட, மாநகர கலந்துரையாடலில் முடிவு

viduthalai
2 Min Read

ஒசூர், ஆக. 13- ஒசூர் மாவட்ட, மாநகர கலந்துரையாடல் கூட்டம் அலசனத்தம் சாலையில் உள்ள சப்தகிரி பள்ளி வளாகத்தில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடை பெற்றது.

அனைவரையும் மாநகர தலைவர் து.ரமேஷ் வரவேற்றார்.தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் கூட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக எடுத் துரைத்தார்.தொடர்ந்து கும்பகோணம் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட ஒசூர் புதிய பொறுப்பாளர்கள் காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி, மாநகர தலைவர் து.இரமேஷ்,ஒன்றிய அமைப் பாளர் பூபதி ஆகியோருக்கு பயனாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவித்தார்.

தலைமைக்கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன். மாவட்ட துணைத் தலைவர் பல.முனுசாமி, ஒன்றிய அமைப்பாளர் பூபதி, மாநகர தலைவர் து.ரமேஷ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி, மாவட்ட துணைச் செயலாளர் இரா.செயசந்திரன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், காப்பாளர் பேராசிரியர் வணங்காமுடி, மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் ஆகியோர் கருத்துரைகளுக்கு பின்,
கும்பகோணம் பொதுக்குழு தீர்மா னங்கள் அனைத்தையும் ஒரு மனதாக ஏற்று செயல்படுத்துவது எனவும், பொதுக்குழு கட்டளை தீர்மானமான பெரியார் உலகம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியினை சிறப்பாக வசூல் செய்து கழக தலைவரிடம் அளிப்பது என்றும், 25.8.2024 ஒசூர் மாவட்ட தலைவர் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி திருமணத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர், கழக துணைத் தலைவர் கவிஞர், தலைமை கழக நிர்வாகி களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், 30.08.2024 அன்று தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத் துவது எனவும், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யாத ஒன்றிய அரசை கண்டிப்ப துடன் தமிழிலும் அறிவிப்பு செய்திட வேண்மெனவும்,

ஒசூர் உள்வட்ட சாலை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு சந்திப்பு பகுதிக்கு “தந்தை பெரியார் சதுக்கம் “என் பெயரிடப்பட்டு ஒசூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுநாள் வரை பெயர்ப்பலகை வைக்க படாதது ஒசூர் திராவிடர் கழக தோழர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வேதனையளிக்கிறது.

இனியும் காலம் தாமதம் செய்யாமல் பெயர்ப் பலகையை நிறுவிட வேண்டுமாய் மாநகராட்சியை கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இறுதியாக மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *