உத்தரப் பிரதேசம், ஆக.12 ஓடும் ரயிலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானில் இருந்து புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் வெளியே குதித்தனர். இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவி லிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூருக்கு் அம்ரிஸ்தர் மெயில் ரயில் நேற்று (11.8.2024) காலை புறப்பட்டது.
ஷாஜகான்பூர் நோக்கிச் சென்ற ரயில், மிரான்பூர் கத்ரா – ஃபதேகஞ்ச் நகர்களுக்கு இடைப்பட்ட பாலத்தைக் கடக்கும்போது, பொதுப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்த தீயணைப்பானிலிருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். சிலர் ரயிலில் இருந்த சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றனர். அதற்குள் சில பயணிகள் அச்சத்தின் மிகுதியால் ரயிலில் இருந்து குதித்தனர்.
இதில், 4 பயணிகள் படுகாயமடைந்த தாக ரயில்வே காவல் துறை தெரி வித்துள்ளது. அவர்கள் ஷாஜகான்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் அளித்த தகவலின்படி, ரயிலில் இருந்த தீயணைப்பானின் தலைப்பகுதியில் உள்ள பொத்தான் அழுத்தமாக பொருந் தாமல் இருந்ததே புகை வெளியேறக் காரணம் எனத் தெரிகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் அன்பாரா பகுதியிலிருந்து ஒடிசா – சத்தீஸ்கர் எல்லையி லுள்ள காரியார் பகுதிக்கு சரக்கு ரயில் நேற்று சென்றது.
நிலக்கரி ஏற்றிச் சென்ற இந்த ரயிலின் இரு பெட்டிகள், வாரணாசி மாவட்டத்திற்குட்பட்ட சக்திநகர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.