‘பழம்’ பெருமை பேசலாமா…!

1 Min Read

கோடைக்காலத்தில் சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் வெப்பமாக இருப்பதால்… ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

இலந்தை: இப்பழம் உடலை குளிர்ச்சியாக்கும். தாது விருத்தியை உண்டாக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணம், புளி ஏப்பம், கண்நோய், தொண்டைப் புகைச்சலை நீக்கும்.

ஆப்பிள்: தூக்கத்தில் நடமாடும் பிரச்சினை உள்ளவர்களுக்கு இரண்டு ஆப்பிளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்துப் பாலில் கலந்து கொடுப்பது நல்லது. இருதய நோய்களுக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து உண்ணலாம்.

திராட்சை: உடல் சூட்டை தணிக்கும். கபக்கட்டு நீக்கும். ரத்தம் விருத்தியாகும். மூளைத் திறன் அதிகரிக்கும். வயிற்றில் ஏற்படும் எரிச்சலை அகற்றும். ஆஸ்துமா பிரச்னைக்கு திராட்சை ரசம் நல்ல பலன் அளிக்கும். சிறுநீரக அழற்சியை நீக்கும்.

நெல்லிக்கனி: நீண்ட ஆயுளைத் தரும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நெல்லிக்கனி சாறு பயன்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவற்றுக்கு நெல்லிக்கனிச்சாறு பலன் தரும். இதன் சாற்றில் தேன் கலந்து கொடுத்தால் சுவாசக் கோளாறு, விக்கல், பித்த மயக்கம் குணமாகும்.

பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் ஏ,பி,சி உள்ளது. ஜீரணம் ஆகக் கூடியது. இளமையும், அழகும் தருவது. பெண்களின் கருப்பைத் தசை நார்களை சுருங்கச் செய்வதற்கு பப்பாளி உதவுகிறது. முறையான மாதவிடாய்ப் போக்கை நிகழ்த்தும்.

அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது நிற்கும். வாந்தி, பித்தம், தாகவறட்சி, காமாலை, மாதவிடாய்க் கோளாறுகளில் நல்ல பலனை அளிக்கக் கூடியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *