திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
திருநெல்வேலி, ஆக.12- 11.8.2024 அன்று மாலை திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல்கூட்டம் தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில்மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார். கழக காப்பாளர்கள் இரா.காசி, சி.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .
திருநெல்வேலி மாவட்டத்தில் அடர்த்தியாக நடைபெற்றுவரும் கழகப் பணிகளை விளக்கி மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் உரையாற்றினார்.
கழகப் பொதுக்குழுவின் தீர்மானங் களை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் வீரவநல்லூர் பொதுக்கூட்டத்தை எழுச்சி யோடு நடத்தவேண்டிய அவசியத்தை விளக்கியும், 108 கோடி செலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டியளிக்க வேண்டிய களப்பணிகளை விளக்கியும் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
வீரவநல்லூர் கழகத்தலைவர் மா.கரு ணாநிதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.தமிழ்ச்செல்வன், சேரன்மகாதேவி ஒன்றியத் தலைவர் காருக்குறிச்சி கோ.செல்வசந்திரசேகர், மாவட்ட மாணவர் கழகத்தலைவர் செ.சூர்யா, தஞ்சை பகுதி செயலாளர் மாரி.கணேசு,நெல்லை பகுதி செயலாளர் மகேசு, வள்ளியூர் நகர ப.க.தலைவர் ந.குணசீலன்,துணைச்செயலாளர் சு.வெள்ளைப்பாண்டி, தென்காசி மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரெ.இரஞ்சித்குமார்,மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
நமது குடும்பத்தலைவர் ஆசிரி யர் அவர்கள் வீரவநல்லூர் பொதுக்கூட் டத்திற்கு தேதியளித்தமைக்கு நன்றி கூறியதுடன் மாதந்தோறும் தேதிய ளித்தாலும் நெல்லை மாவட்டக் கழகம் சிறப்பாக நடத்தும் என மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையுரையில் தெரிவித்தார்.
ஏர்வாடியில் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற கூட்டத்தை சிறப்பாக நடத்தித்தந்த வள்ளியூர் ப.க.தலைவர் ந.குணசீலன்,துணைச்செயலாளர் சு.வெள்ளைப்பாண்டி இருவருக்கும் மாவட்டக் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்
செப்டம்பர் 1இல் மாலை ஆறு மணிக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவை விளக்கி நடைபெறும் பொதுக் கூட்டத்தை வீரவநல்லூரில் மிகுந்த எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய்யப்படட்டது
வீரவநல்லூர் வருகைதரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்டக்கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
4.8.2024 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை வரவேற்பதுடன் செய லாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் தொடங்கி சேலத்தில் நிறைவு பெற்ற நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் பங்குபெற்று சிறப்பித்த மாவட்ட இளைஞரணி தலைவர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு பாராட் டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.