காரைக்குடி, ஆக. 12- காரைக்குடி மாவட்ட மேனாள் மாவட்டத் தலைவர் ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களின் படத் திறப்பு மற்றும் நினைவு மலர் வெளியீட்டு விழா, அவரது சொந்த ஊரான பஞ்சாத்தி (சாலைக் கிராமம்)யில் உள்ள அவரது இல்லத்தில் ஆகஸ்ட் 11 ஞாயிறன்று நடைபெற்றது.
காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை தலைமையில், சிவகங்கை மாவட்டக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், காரைக்குடி மாவட்டத் துணைத் தலைவர் மணிவண்ணன், நகரத் தலைவர் ந .ஜெகதீசன், நகரச் செயலாளர் தி.க.கலைமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் காரைக்குடி மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி வரவேற்புரை ஆற்றினார்.
சுயமரியாதைச் சுடரொளி ச.அரங்க சாமி அவர்களின் படத்தினை நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி .பூங்குன்றன் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரது உரையில் “அரங்கசாமி அவர்கள் மறைந்தார் என்கிற செய்தி துயரமாக இருந்தாலும் ஒரு வகையில் பெருமையாக இருக்கிறது ஒரு பெரியார் பெருந்தொண்டர், கருப்பு சட்டைக்காரரைப் பற்றி மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் கூட, கொள்கையில் மாறுபட்டு உள்ளவர்கள் கூட ஒரு பெரியார் தொண்டரை இந்த அளவிற்கு பெருமையாக பேசுகிறார்கள் என்றால் அது இயக்கத்திற்கு கிடைத்த பெருமை என்றே கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டார்
மானாமதுரை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி நினைவு மலரை வெளியிட முதல் படியை மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நினைவு உரையாற்றினார்.
தொடர்ந்து தலைமைக் கழக அமைப்பாளர் கா. மா.சிகாமணி, தலை மைக் கழக அமைப்பாளர், மதுரை வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, காவல்துறை கூடுதல் இயக்குனர் (ஓய்வு) எஸ். ராமநாதன், மதுரை மருத்துவக் கல்லூரி தலைமை அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் செல்வ சிதம்பரம், இளையாங்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறு. செல்வராசன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ.முத்துக் குமார், இளையான்குடி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கா.ஜெகதீஸ்வரன், கழக பொதுக்குழு உறுப்பினர் சிவ கங்கை மணிமேகலை (சுப்பையா), பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், வழக்குரைஞர் சேவியர், பெரியார் முத்து, வழக்குரைஞர் முத்தரசு பாண்டியன் நினைவுரை ஆற்றினர்.
நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப.மதிய ரசன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வே.தமிழ் மாறன், இளையாங்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெகதீஸ்வரன், இளையாங்குடி ஒன்றிய கழக தலைவர் சுந்தர்ராசன், இளையான்குடி ஒன் றிய செயலாளர் பழனி வட்டன், தேவ கோட்டை நகரத் தலைவர் வீ.முருகப்பன், தேவகோட்டை நகரச் செயலாளர் பாரதிதாசன் தேவகோட்டை ஒன்றியச் செயலாளர் அ.ஜோசப், தேவகோட்டை நகர ப.க அமைப்பாளர் சிவ. தில்லை ராசா, திருமண வயல் பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்ட கழக அமைப்பாளர் மானாமதுரை அனந்தவேல், கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி ஆ. சுப்பையா, பகுத்தறிவு ஆசிரியர் அணி தோழர், பாலகிருஷ்ணன், எழுத்தாளர் செங்கதிர், இளைஞர் அணித் தோழர் அ.பிரவீன் முத்துவேல் மற்றும் பெருந்திரளான கிராமத்து மக்கள் உறவினர்கள் பங்கேற்றனர் ச. அரங்கசாமி அவர்களின் மூத்த மகள் பொன்மலர் நன்றியுரை கூறினார்.