திருச்சி, ஆக. 12- பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத் துவமனை இணைந்து முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப் பீட்டு திட்டத்தின் கீழ் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 11.08.2024 அன்று காலை 9.30 மணியளவில் திருச்சி மணிகண்டம் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவில் வளா கத்தில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா மற்றும் சுள்ளிக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சுந் தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மக்கள் நலப் பணிகளை மேற் கொள்ளும் பெரியார் மருத்துவக் குழுமத்திற்கும் ஹர்ஷமித்ரா மருத்துவ மனைக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தலை மையேற்ற பெரியார் மருந்தியல் கல்லூரி முதல் வர் முனைவர் இரா.செந்தாமரை பெருகி வரும் புற்றுநோய் குறித்த பல்வேறு கருத்துக்களை பொதுமக்களிடம் விளக் கினார்.
ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவருமான மரு. க. கோவிந்தராஜ், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சுகிர்தா ஆகியோர் தலைமையில் ரூபாய் 5000/- மதிப்புள்ள புற்று நோய் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள் ளப்பட்டது. மேலும் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் பி. மஞ்சுளா வாணி பங்கேற்ற பொது மருத்துவ முகாமில் கிராம மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பெரியார் மருத்துவக் குழுமத்தின் உதவியுடன் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாண வர்கள் இலவசமாக வழங் கினர்.
இம்மருத்துவ முகா மில் 72 பேர் பொது மருத் துவ முகாமிலும் மார் பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் 47 பெண்களும் கலந்து கொண்டு பயனடைந் தனர். இம்மருத்துவ முகாமினை மணிகண் டம் பகுதி பட்டயர் பெரியசாமி, ஹர்ஷ மித்ரா புற்றுநோய் மருத் துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ.அருணாச்சலம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரி யர் க.அ.ச. முகமது ஷபீஃக் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர்கள் ஹெலன், காமாட்சி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.