புதுடில்லி, ஆக.11 18ஆவது மக்களவையின் முதல் முழுமையான கூட்டத்தொடர் கடும் பதற்றத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.
மாநிலங்களவைத் தலைவர் குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கர் எதிர்க்கட்சி மூத்த உறுப்பினர்களை மரியாதையற்ற முறையில் விமர்சனம் செய்தார் இதனால். இந்தியா கூட் டணி கட்சிகள் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பதவி நீக்கம் குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில் நாளை (12.8.2024) திங்கட்கிழமை முடிவடையவிருந்த கூட்டத்தொடர் வெள்ளிக் கிழமை (9.8.2024)அன்றே ஒத்திவைக்கப்பட்டது.
தன்கர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் மீது தொடர்ந்து மோதல் போக்கையே மேற் கொண்டு வருகிறார்
வினேஷ் போகத் விவகாரத்தில் எதிர்க்கட்சி கள் போராட்டம் நடத் தியபோது, அவைத்தலை வர் கோபத்தில் அவையை விட்டு வெளியேறினார். இது விதிமுறைகளுக்கு எதிரானதாகும்
எதிர்க்கட்சி தலைவரை நீக்கக் கோரும் தீர்மானம் குறித்து சில நாட்களாகவே ஆலோசித்து வந்ததாக வும், இந்தியா கூட் டணி கட்சிகள் அனைத்தும் இதில் உடன்பட்டுள்ள தாகவும் எதிர்க்கட்சி வட் டாரங்கள் தெரிவித்தன.
பாஜக நாடாளுமான்ற உறுப்பினர் கணேஷ் திவாரி கடந்த ஜூலை 31-ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குறித்து அவதூ றான கருத்துகளை தெரி வித்ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில், சமாஜவாதி கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் ஜெயா பச்சன், தலைவரின் தொனியை ஏற்க முடியாது என்று கூறி னார். இதற்கு பதிலளித்த தன்கர், “ஜெயாஜி நீங்கள் பெரிய புகழ் பெற்றவர்… நீங்கள் என் தொனி பற்றி பேசுகிறீர்களா? போதும். நீங்கள் யாராக இருந்தாலும், கண்ணியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நடிகை, ஆனால் கண்ணியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். இதையடுத்து, சோனியா காந்தி தலை மையிலான எதிர்க்கட்சிகள் மேலவையை விட்டு வெளியேறினர்.
80-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஏற்கனவே இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டதாகவும், கூட்டத்தொடர் முடிந்த தால், இந்த தீர்மானத்தை முன்னெடுப்பது குறித்தும், முன்னெடுக்க முடிவு செய்தால் எப்போது என்பது குறித்தும் கட்சிகள் விவாதித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
“கூட்டத்தொடர் முடிந்து விட்டதால் தொழில் நுட்ப விடயங்களைப் பற்றி விவாதித்து வருகிறோம். தீர்மானத்தை கொண்டுவர 14 நாட்களுக்கு முன்பு தாக்கீது கொடுக்க வேண் டும்” என்று ஒரு தலைவர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தின் 67(பி) பிரிவின்படி,
“மூன்று முக்கிய பிரச்சினைகள் உள்ளன. தலைவரின் வெளிப் படையான மற்றும் தொடர்ச்சியான பாகு பாட்டுப் போக்கை நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம். எதிர்க் கட்சித் தலைவர் எந்த நேரத்திலும் தலையிட அனுமதிக்கப்பட வேண் டும் மற்றும் அவரது ஒலிவாங்கி அணைக்கப் படக்கூடாது. அவையை விதிகள் மற்றும் மரபு களின்படி நடத்த வேண்டும். எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக தனிப்பட்ட கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மற்றொரு எம்பி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே பேச எழும்போது அவரது ஒலிவாங்கி அணைக்கப்பட்டு இடை யூறு செய்யப்படுகிறது “இது ஒரு கட்சியைப் பற்றியது அல்ல. எதிர்க் கட்சித் தலைவருக்கு சரியாக இல்லாத, அவ மானகரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும் என்று எதிர் கட்சியினர் கூறினர்.