நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பதும், நிலுவை வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விளக்கம்

2 Min Read

சண்டிகர், ஆக.11 சண்டீகரின் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். ‘நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப் பதும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான கார ணங்களில் ஒன்று’ என்று விளக்கமளித்தார்.
சண்டீகரின் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திர சூட், விழாவுக்குப் பிறகு செய்தியாளா்களின் பல் வேறு கேள்விகளுக்கு பதி லளித்தார். அப்போது அவா் கூறியதாவது:

மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வைத்து அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் செல்வது போன்று, நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப்பதே வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப் பதற்கான காரணங் களில் ஒன்றாகும். இதைச் சமாளிக்க மருத் துவமனைகளில் மேற் கொள்ளப்படுவதை போன்று, நீதிமன்றங் களி லும் உள்கட்டமைப்பு வச திகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உச்சநீதிமன்றமும் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உச்ச நீதின்றத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 5 நாள்களில் 1,000 வழக்குகளுக்கு தீா்வளிக்கப்பட்டது.
நிகழாண்டில் கோடை விடுமுறைக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் 21 விடுமுறைக்கால அமா்வுகள் அமைக்கப் பட்ட, 4,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக ்கொள்ளப்பட்டன. அவற்றில், 1,170 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இதுபோன்று பல்வேறு வழிமுறைகள் மூலம் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்றங்களில் ஆங்கில மொழியில் அளிக்கப்படும் தீா்ப்புகளை மக்கள் புரிந்துகொள்ள வசதியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தீா்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயா்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. உச்சநீதிமன்றத்தில் கடந்த 1950 முதல் 2024-ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்டுள்ள 37,000 தீா்ப்புகளில், 22,000 தீா்ப்புகள் பஞ்சாபி மொழியில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன. 36,000-க்கும் அதிக மான தீா்ப்புகள் ஹிந்தியில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன. பிற மாநில மொழிகளி லும் தீா்ப்புகள் மொழி பெயா்க்கப்பட்டு வரு கின்றன.
உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்று, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

நீதிபதி காலிப் பணி யிடங்களைப் பொறுத்த வரை, மாவட்ட நீதிமன்ற காலி இடங்களை நிரப்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதி மன்றத்தில் தற்போது அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட் டுள்ளன என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *