புதுடில்லி, ஆக.11 வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப் பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிகழ்வை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. நேற்று (10.8.2024) பிரதமர் வயநாடு சென்றுள்ளார். மணிப்பூருக்கும் அவர் சென்றால் நன்றாக இருக்கும்.
தற்போது நடைபெற்று முடிந்துள்ளது சிறிய நாடாளுமன்ற கூட்டத் தொடராகும். நிதிநிலை அறிக்கை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இரு அவைகளிலும் எழுப்பப்பட்டன. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இரு அவைகளிலும் முக் கியமான பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப் பப்பட்டது.
எதிர்க்கட்சியினர் தீவிரமாக இருந்தோம். நாடாளுமன்றத்தில் பொது மக்களின் பிரச்சி னைகளை திறமையாக விவாதித்தோம். பத்து ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக மக்கள் வலுவான எதிர்க்கட்சி யினரை சந்திக்கிறார்கள். இந்த உண்மையைக் கண்டு அரசு பயப்படு கிறது. பிரதமர் நாடா ளுமன்றத்திற்கு வருவ தேயில்லை, நாடாளுமன் றத்திற்கு வரும் அமைச்சர்கள் உண்மைக்கு மாறான தகவல் களை வழங்கு கிறார்கள்.
பல்வேறு சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகளை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை, ஆனால் ராகுல் காந்தி அனை வருடைய பேச்சையும் கேட்கிறார்” என்று தெரிவித்தார்.