சென்னை,ஆக.11- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிக்கான கால நிர்ணய அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
வாக்காளர் பட் டியல் திருத்தப் பணி களுக்கு முன்பாக, வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மேற் கொள்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபர் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடை பெறவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக அக்டோ பர் 29ஆம் தேதி வெளி யிடப்பட உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.